மாவட்ட செய்திகள்

தஞ்சையில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயற்சி இந்து மக்கள் கட்சியினர் 14 பேர் கைது + "||" + 14 people arrested for trying to lock shop

தஞ்சையில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயற்சி இந்து மக்கள் கட்சியினர் 14 பேர் கைது

தஞ்சையில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயற்சி இந்து மக்கள் கட்சியினர் 14 பேர் கைது
தஞ்சையில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயற்சி செய்த இந்து மக்கள் கட்சியினர் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்,

விவேகானந்தரின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அவருடைய பிறந்த நாள் அன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் விடுமுறை அறிவிக்கப்பட வில்லை.


இந்த நிலையில் விடுமுறை அறிவிக்காததால் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்போவதாக தஞ்சை மாவட்ட இந்து மக்கள் கட்சியினர் அறிவித்து இருந்தனர். அதன்படி மாவட்ட பொதுச்செயலாளர் சுகுமார் தலைமையில் தலைவர் பிரபு முன்னிலையில் நிர்வாகிகள் சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடுவதற்காக தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள முருகன்கோவில் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

14 பேர் கைது

ஊர்வலம் சாந்தப்பிள்ளைகேட் டாஸ்மாக் கடை அருகே வந்தது.

அப்போது அங்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் இந்து மக்கள் கட்சி நகர செயலாளர் சதீஷ்குமார், நகர நிர்வாகிகள் தாமோதரன், சிவனேசன் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அம்பையில் பயங்கரம் அம்மிக்கல்லை தலையில் போட்டு டிரைவர் கொலை மனைவி கைது
அம்பையில் அம்மிக்கல்லை தலையில் போட்டு டிரைவர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
2. பாதிக்கப்பட்ட பெண் தூய்மை பணியாளருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தை அரசியல் கட்சியினர் முற்றுகை
பாதிக்கப்பட்ட பெண் தூய்மை பணியாளருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அரசியல் கட்சியினர் நேற்று முற்றுகையிட்டனர்.
3. மருந்து கடைக்காரரிடம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டிய ரவுடி கைது
மருந்து கடைக்காரரிடம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டிய ரவுடி கைது செய்யப்பட்டார்.
4. மருந்து கடைக்காரரிடம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டிய ரவுடி கைது
மருந்து கடைக்காரரிடம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டிய ரவுடி கைது செய்யப்பட்டார்.
5. இந்து மதத்தை இழிவுபடுத்தி பேச்சு; சினிமா இயக்குனர் வேலுபிரபாகரன் கைது
இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசிய வழக்கில் சினிமா இயக்குனர் வேலுபிரபாகரனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.