மாவட்ட செய்திகள்

பா.ஜனதா எம்.எல்.ஏ. வீட்டு முன்பு போராட்டத்துக்கு முயற்சி; முன்னாள் மந்திரி ஜமீர் அகமதுகான் கைது + "||" + Try to struggle to front of the bjp MLA Home; Former minister Jameer Ahmed is arrested

பா.ஜனதா எம்.எல்.ஏ. வீட்டு முன்பு போராட்டத்துக்கு முயற்சி; முன்னாள் மந்திரி ஜமீர் அகமதுகான் கைது

பா.ஜனதா எம்.எல்.ஏ. வீட்டு முன்பு போராட்டத்துக்கு முயற்சி; முன்னாள் மந்திரி ஜமீர் அகமதுகான் கைது
பல்லாரியில் பா.ஜனதா எம்.எல்.ஏ. வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற முன்னாள் மந்திரி ஜமீர் அகமதுகான் கைது செய்யப்பட்டார். அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அவரை போலீசார் கைது செய்திருந்தனர்.
பெங்களூரு, 

பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் சோமசேகர் ரெட்டி. இவர், பல்லாரி டவுனில் கடந்த 3-ந் தேதி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது சோமசேகர் ரெட்டி எம்.எல்.ஏ. முஸ்லிம் சமூகத்தினரை எச்சரிக்கும் விதமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதுதொடர்பாக சோமசேகர் ரெட்டி மீது பல்லாரி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவருக்கு எதிராக பெங்களூரு, பல்லாரியில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. அத்துடன் போலீஸ் டி.ஜி.பி.யிடமும் சோமசேகர் ரெட்டி மீது காங்கிரஸ் தலைவர்கள் புகார் அளித்து உள்ளனர்.

அதே நேரத்தில் முஸ்லிம்களை எச்சரிக்கும் விதமாக பேசிய சோமசேகர் ரெட்டி எம்.எல்.ஏ. வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மந்திரி ஜமீர் அகமதுகான் தெரிவித்திருந்தார். இதையொட்டி பல்லாரி டவுனில் உள்ள சோமசேகர் ரெட்டி எம்.எல்.ஏ. வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சோமசேகர் ரெட்டி வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பல்லாரிக்கு நேற்று காலையில் தனது ஆதரவாளர்களுடன் ஜமீர் அகமதுகான் சென்றார். ஆனால் பல்லாரி புறநகர் குடுத்தினி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ஜமீர் அகமதுகானையும், அவரது ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோரையும் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் அவரையும், ஆதரவாளர்களையும் குடுத்தினி போலீசார் கைது செய்து, அங்கிருந்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்து செல்ல முயன்றனர். அப்போது போலீஸ் வாகனத்தை ஜமீர் அகமதுகானின் ஆதரவாளர்கள் முற்றுகையிட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, ஜமீர் அகமதுகானை குடுத்தினி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்வதற்கு பதிலாக பி.டி.ஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்திவிட்டு போலீசார் விடுவித்தனர். பல்லாரி டவுனில் உள்ள சோமசேகர் ரெட்டி எம்.எல்.ஏ. வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ஜமீர் அகமதுகான் எந்த விதமான அனுமதியும் பெறாத காரணத்தால், அவரை கைது செய்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் மந்திரி ஜமீர் அகமதுகான் நிருபர்களிடம் கூறுகையில், "பல்லாரியில் அமைதியை கெடுக்க நான் வரவில்லை. சோமசேகர் ரெட்டி எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சை கண்டித்தும், அவருக்கு எதிராக போராடுவதற்கும் தான் நான் இங்கு வந்தேன். நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவனாக பல்லாரிக்கு வரவில்லை. முஸ்லிம்களுக்கு ஆதரவாக போராட பல்லாரிக்கு வந்தேன்.

சோமசேகர் ரெட்டி வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட போலீசாரிடம் அனுமதி கேட்டு இருந்தேன். போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் நான் அறிவித்தபடி போராட்டத்தில் ஈடுபட முயன்றேன். இதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை," என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. உணவு தரச்சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
உணவு தரச்சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உணவு பொருள் பாதுகாப்பு இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
2. மல்லூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் வாலிபர் கைது திடுக்கிடும் தகவல்கள்
மல்லூர் அருகே மூதாட்டி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரை பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
3. வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி சட்ட நகலை எரித்து காவிரி உரிமை மீட்புக்குழுவினர் போராட்டம் 16 பேர் கைது
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தஞ்சையில் சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்திய காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. கள்ளக்காதலை கைவிடாததால் பிளேடால் மனைவியின் கழுத்தை அறுத்த பெயிண்டர் கைது
வேடசந்தூர் அருகே, கள்ளக்காதலை கைவிடாததால் மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்த பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.
5. திருமணம் செய்து வைக்காததால் அம்மிக்குழவியை தலையில் போட்டு விவசாயியை கொன்ற தம்பி கைது
பட்டுக்கோட்டை அருகே திருமணம் செய்து வைக்காததால் அம்மிக்குழவியை தலையில் போட்டு விவசாயியை கொன்ற அவரது தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...