ரூ.400 கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்: வாலிபரை கொன்ற 2 நண்பர்கள் கைது
பொங்கலூர் அருகே ரூ.400 கடனை திருப்பி கேட்ட வாலிபரை கொன்ற நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொங்கலூர்,
பொங்கலூர் அருகே ரூ.400 கடனை திருப்பி கேட்ட வாலிபரை கொன்ற நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பொங்கலூர் அருகே உள்ள கெருடமுத்தூரை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் நந்த குமார் (வயது24). கூலிவேலை செய்து வருகிறார். இவருடைய நண்பர்கள் அதே ஊரை சேர்ந்த விஜய் (22) மற்றும் சுதாகர் (20). ஏற்கனவே நந்தகுமாரிடம் இருந்து செலவுக்காக சுதாகர் ரூ.400 கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை 5 மணிக்கு இவர்கள் 3 பேரும் ஊரின் அருகே உள்ள மலைமேடு என்ற இடத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் தாங்கள் வாங்கிச்சென்ற மதுவை நந்தகுமாரை தவிர மற்ற 2 பேரும் குடித்துள்ளனர். பின்னர் அந்த இடத்தில் 3 பேரும் நீண்டநேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நந்தகுமார் தான் கொடுத்த ரூ.400-ஐ சுதாகரிடம் திருப்பி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த சுதாகரும், விஜய்யும் சேர்ந்து நந்தகுமாரை தாக்கியதோடு, அவரை கீழே தள்ளி உள்ளனர். அப்போது அந்த பகுதியில் கிடந்த கல்லில் விழுந்த நந்தகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் அங்கேயே மயக்கம் அடைந்தார். இதனால் பயந்து போன 2 பேரும், நந்தகுமாரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நந்தகுமாரின் பெற்றோர் அங்கு மயங்கி கிடந்த நந்தகுமாரை மீட்டு ஒரு காரில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நந்தகுமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து காமநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விஜய் மற்றும் சுதாகரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் கொடுத்த கடன் ரூ.400-ஐ நந்தகுமார் திருப்பி கேட்டதால், ஆத்திரம் அடைந்து அவரை தாக்கியதாகவும், இதனால் மயக்கம் அடைந்த அவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சுதாகரையும், விஜயையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story