17-ந் தேதி கர்நாடகம் வரும் அமித்ஷாவிடம் மந்திரிசபை விரிவாக்கத்திற்கு ஒப்புதல் பெறப்படும் எடியூரப்பா பேட்டி
17-ந் தேதி கர்நாடகம் வரும் அமித்ஷாவிடம் மந்திரிசபை விரிவாக்கத்திற்கு ஒப்புதல் பெறப்படும் என்று முதல்- மந்திரி எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
17-ந் தேதி கர்நாடகம் வரும் அமித்ஷாவிடம் மந்திரிசபை விரிவாக்கத்திற்கு ஒப்புதல் பெறப்படும் என்று முதல்- மந்திரி எடியூரப்பா கூறினார்.
மந்திரிசபை விரிவாக்கம்
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல் முடிவடைந்த உடனேயே மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என்றும், அதில் இடைத்தேர்தலில் வெற்றி பெறும் எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படும் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார். இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றது. இடைத்தேர்தல் முடிந்து ஒரு மாதமாகியும் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறவில்லை. இதனால் மந்திரி பதவியை எதிர்நோக்கியுள்ள எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த மாத இறுதியில் எடியூரப்பா வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்திற்கு பிறகு மந்திரிசபை விரிவாக்கம் மேற்கொள்ள எடியூரப்பா திட்டமிட்டிருந்தார். ஆனால் வெளிநாடு சுற்றுப்பயணத்திற்கு முன்பு மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் எடியூரப்பாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். அதனால் வெளிநாட்டு பயணத்திற்கு முன்பே மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா ஏற்கனவே கூறியுள்ளார்.
அமித்ஷாவின் ஒப்புதல்
இந்த நிலையில் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று சிக்கமகளூரு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்பு பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறிய தாவது:-
உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 17-ந் தேதி கர்நாடகம் வருகிறார். அப்போது அவருடன் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தப்படும். அத்துடன் அமித்ஷாவின் ஒப்புதல் பெறப்படும். இன்றும் (அதாவதுநேற்று), நாளையும் (இன்று) சிக்கமகளூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். இதன் காரணமாக டெல்லி பயணத்தை ரத்து செய்துவிட்டேன்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story