மாவட்ட செய்திகள்

தாமரைக்குளம் ஊராட்சியில் அம்மா இளைஞர் விளையாட்டு மையம் ; அரசு தலைமை கொறடா திறந்து வைத்தார் + "||" + Mother Youth Sports Center at Tamaraikulam Panchayat; The head of state opened the door

தாமரைக்குளம் ஊராட்சியில் அம்மா இளைஞர் விளையாட்டு மையம் ; அரசு தலைமை கொறடா திறந்து வைத்தார்

தாமரைக்குளம் ஊராட்சியில் அம்மா இளைஞர் விளையாட்டு மையம் ; அரசு தலைமை கொறடா திறந்து வைத்தார்
தாமரைக்குளம் ஊராட்சியில் அம்மா இளைஞர் விளையாட்டு மையத்தை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்தார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், தாமரைக்குளம் ஊராட்சியில் அம்மா இளைஞர் விளையாட்டு மையம் திறப்பு விழா நடைபெற்றது. 

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார். இதில் ஜெயங்கொண்டம் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விளையாட்டு மையத்தினை திறந்து வைத்து அம்மா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார். 

அப்போது அவர் பேசியதாவது:–

அரியலூர் மாவட்டத்தில் 201 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 2 பேரூராட்சிகளில் அம்மா விளையாட்டு மையங்கள் அமைத்து, 203 கபடி, கையுந்து, கிரிக்கெட் மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் இன்று (அதாவது நேற்று) அரியலூர் ஊராட்சி ஒன்றியம் தாமரைக்குளத்திற்கும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், குண்டவெளி கிராம பஞ்சாயத்திற்கும், செந்துறை ஊராட்சி ஒன்றியம், குமிழியம் கிராம பஞ்சாயத்திற்கும் மற்றும் உடையார்பாளையம் பேரூராட்சியிலும் அம்மா இளைஞர் விளையாட்டு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, மைதானத்தினை சுற்று மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சந்திரசேகர், ஒன்றியக்குழு பெருந்தலைவர் செந்தமிழ்செல்வி, துணை தலைவர் சரஸ்வதி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜெயக்குமார் ராஜா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் அன்பழகன் (அரியலூர்), ராஜேந்திரன் (தா.பழூர்) மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தாமரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார் நன்றி கூறினார்.