மாவட்ட செய்திகள்

பொங்கல் பண்டிகையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் - கடலில் புனித நீராடி வழிபாடு + "||" + Pongal festival Pilgrims gathered at Thiruchendur temple

பொங்கல் பண்டிகையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் - கடலில் புனித நீராடி வழிபாடு

பொங்கல் பண்டிகையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் - கடலில் புனித நீராடி வழிபாடு
பொங்கல் பண்டிகையையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி வழிபட்டனர்.
திருச்செந்தூர், 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த சில நாட்களாக பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பச்சை மற்றும் காவி நிற ஆடை அணிந்து, பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்தனர்.

ஒவ்வொரு ஊரில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட மினிலாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் முருக பெருமானின் உருவப்படத்தை வைத்து, அவரது திருப்புகழை பாடியவாறு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். பெரும்பாலான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோவில் வளாகம், கடற்கரை, விடுதிகள், மண்டபங்களில் பக்தர்கள் குடும்பத்தினருடன் தங்கியிருந்து வழிபட்டனர். கோவில் வளாகத்தில் பக்தர்கள் பல்வேறு குழுக்களாக அமர்ந்து, முருகப்பெருமானின் திருப்புகழை பாடி வேண்டினர். அதிகாலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கோவில் கிரிப்பிரகாரத்தில் ஆண்கள் அங்கபிரதட்சணம் செய்தும், பெண்கள் அடிபிரதட்சணம் செய்தும் வழிபட்டனர். கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பொங்கல் பண்டிகை தினமான இன்று (புதன்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. காலையில் தை மாத பிறப்பு உத்திராயண புண்ணிய காலத்தை முன்னிட்டு, சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் உச்சிகால அபிஷேகம் நடைபெறும். மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும்.

நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடக்கிறது. மாலை 3 மணி அளவில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் பரிவேட்டைக்காக வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டைவெளி மண்டபத்துக்கு செல்கிறார். பரிவேட்டை நிகழ்ச்சிக்கு பின்னர் சுவாமி ரதவீதிகள், சன்னதி தெரு வழியாக சென்று மீண்டும் கோவிலை சேர்கிறார். ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பொங்கல் பண்டிகைக்கு மகள்களுக்கு சீர் செய்ய முடியாத விரக்தியில் பெண் தற்கொலை
பொங்கல் பண்டிகைக்கு மகள்களுக்கு சீர் செய்ய முடியாத விரக்தியில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
2. பொங்கல் பண்டிகை: நாகை மாவட்டத்தில், ரூ.6 கோடியே 68 லட்சம் மது விற்பனை - கடந்த ஆண்டை விட ரூ.34 லட்சம் அதிகம்
நாகை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.6 கோடியே 68 லட்சத்துக்கு மது விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட ரூ.34 லட்சம் அதிகம் ஆகும்.
3. பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி
கொடைக்கானலில், பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி நடந்தது.
4. பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் படையெடுப்பு: சென்னையில் இருந்து பஸ்களில் 8 லட்சம் பேர் பயணம்
பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக சென்னையில் இருந்து பஸ்களில் 8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து உள்ளனர். ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
5. பொங்கல் பண்டிகை கொண்டாட செங்கரும்பு, மஞ்சள் குலை வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம் - வாகன நெரிசலால் போக்குவரத்து பாதிப்பு
தேனி நகரில் செங்கரும்பு, மஞ்சள் குலை வாங்குவதற்கு சாலையோர கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நகரில் வாகன நெரிசலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.