மாவட்ட செய்திகள்

ஒழுக்கத்தை உருவாக்கி கொடுக்கும் இடம் விளையாட்டு மைதானம் - அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு + "||" + A place where discipline is created and given Playground Minister KC Veeramani's speech

ஒழுக்கத்தை உருவாக்கி கொடுக்கும் இடம் விளையாட்டு மைதானம் - அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு

ஒழுக்கத்தை உருவாக்கி கொடுக்கும் இடம் விளையாட்டு மைதானம் - அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு
ஒழுக்கத்தை உருவாக்கி கொடுக்கும் இடமாக விளையாட்டு மைதானம் திகழ்கிறது, என அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.
காட்பாடி,

அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் சார்பில் காட்பாடியை அடுத்த தொண்டான்துளசி கிராமத்தில் விளையாட்டு மைதானம் புதிதாக அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா மற்றும் இளைஞர்கள், பெண்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமை தாங்கி பேசினார். செஞ்சி ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு விளையாட்டு மைதானத்தை தொடங்கி வைத்து, இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

நான் கிராமங்களுக்கு செல்லும்போதெல்லாம் அங்குள்ள இளைஞர்கள் விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தேவையென்று மனு கொடுக்கின்றனர். இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கிராமங்களில் அம்மா விளையாட்டு மைதானம் அமைக்க உத்தரவிட்டு, அது நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.

விளையாடத் தொடங்கி விட்டால் மாலைநேரம் எப்போது வரும் என எதிர்பார்க்க தொடங்கி விடுவோம். நானும் சட்டமன்றம் நடக்கும்போதெல்லாம் சட்டசபை முடிந்தவுடன் வீட்டுக்கு வந்து சுமார் ஒரு மணிநேரம் விளையாடுவேன். அதனை வழக்கமாகவே வைத்துள்ளேன். ஒழுக்க நெறிகளை கடைப்பிடிக்கும் இடமாகவும், ஒழுக்கத்தை உருவாக்கி கொடுக்கும் இடமாகவும் விளையாட்டு மைதானம் திகழ்கிறது. சாதி, மதம் இல்லாமல் ஒற்றுமையுடன் பழகும் இடமாக விளையாட்டு மைதானம் திகழ்கிறது. விளையாட்டில் ஈடுபடும்போதுதான் ஆர்வம் அதிகரிக்கிறது.

கிராமங்களில் உள்ள இளைஞர்கள் விளையாட்டின் மூலம் தங்கள் திறமை மற்றும் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு உலக அளவில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுபோன்ற திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. இளைஞர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, ஆவின் தலைவர் வேலழகன், மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை தலைவர் சுமைதாங்கி சி.ஏழுமலை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஜெயப்பிரகாசம், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன், சிவா, ஒன்றிய துணை செயலாளர் பொன்முடி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார், கே.வி.குப்பம் தாசில்தார் சுஜாதா, எடக்கிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் டி.கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு உடனடியாக இ-பாஸ்கள் வழங்க கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு - அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு இ-பாஸ்களை உடனடியாக வழங்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார்.
2. கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்தால், வேலூர் மாவட்டத்தில் அடுத்த மாதம் வரை ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்புள்ளது - அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்
கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்தால், வேலூர் மாவட்டத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) வரை ஊரடங்கை அமல் படுத்த வாய்ப்புள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். குடியாத்தம் வந்த அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
3. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில், 3 நாட்களில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை - அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 3 நாட்களில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். வாணியம்பாடி பகுதியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
4. ராணிப்பேட்டையில், தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் - அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்
ராணிப்பேட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
5. திருப்பத்தூர் மாவட்டத்தில் படிப்படியாக ஊரடங்கில் தளர்வு கடைகள் திறப்பு, போக்குவரத்துக்கு விரைவில் அனுமதி - அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி
திருப்பத்தூர் மாவட்டத்தில் நிலைமைக்கு ஏற்றார்போல ஊரடங்கில் படிப்படியாக தளர்வு செய்யப்படும் எனவும் கடைகள் திறக்கப்பட்டு பஸ் போக்குவரத்தும் விரைவில் தொடங்கப்படும் எனவும் அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை