மாவட்ட செய்திகள்

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ஊர்வலம்: முஸ்லிம் அமைப்பினர் 1,000 பேர் மீது வழக்கு + "||" + Protest Against Citizenship Amendment: 1,000 Muslim People Case

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ஊர்வலம்: முஸ்லிம் அமைப்பினர் 1,000 பேர் மீது வழக்கு

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ஊர்வலம்: முஸ்லிம் அமைப்பினர் 1,000 பேர் மீது வழக்கு
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ஊர்வலம் நடத்திய முஸ்லிம் அமைப்பினர் 1,000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி, 

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக திருச்சியில் நேற்று முன்தினம் இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பினர் ஊர்வலம் நடத்தினர். தில்லைநகர் பாஸ்போர்ட்டு அலுவலகம் அருகே இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் கோர்ட்டு அருகே எம்.ஜி.ஆர். சிலையை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தின் போது எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பலூன்களை பறக்க விட்டனர். இந்த நிலையில் போலீஸ் அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியதாக முஸ்லிம் அமைப்பை சேர்ந்த 1,000 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் செசன்சு கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக விமானநிலையம் அருகே வயர்லெஸ் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடத்தியதாக முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் 13 பேர் உள்பட பலர் மீது விமானநிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மணலூர்பேட்டையை தலைமையிடமாக கொண்டு, புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கக்கோரி அனைத்து கட்சியினர் ஊர்வலம்
மணலூர் பேட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கக்கோரி அனைத்து கட்சிகள் சார்பில் நேற்று ஊர்வலம் நடந்தது.
2. ஜனநாயக வாலிபர் சங்கம், சி.ஏ.ஏ. எதிர்ப்பு இயக்கத்தினர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஊர்வலம்
ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், சி.ஏ.ஏ. எதிர்ப்பு இயக்கத்தினர் இணைந்து திருச்சியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஊர்வலம் நடத்தினர்.
3. ரூ.5 லட்சம் கேட்டு தொழில் அதிபரை மிரட்டிய வழக்கு: ஓராண்டுக்கு பிறகு மேலும் 2 பேர் கைது
ரூ.5 லட்சம் கேட்டு தொழில் அதிபரை மிரட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேர் ஓராண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்டனர்.
4. தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்
தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பங்கேற்றனர்.
5. மயிலாடுதுறையில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி பா.ம.க.வினர் ஊர்வலம்
மயிலாடுதுறையில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி பா.ம.க. சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.