பெரிய சூரியூரில் நாளை ஜல்லிக்கட்டு: முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு


பெரிய சூரியூரில் நாளை ஜல்லிக்கட்டு: முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 15 Jan 2020 4:00 AM IST (Updated: 15 Jan 2020 1:34 AM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நாளை(வியாழக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளன.

துவாக்குடி: 

 வாடிவாசல், மேடை, தடுப்புகள் என்று போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். 

இதுபற்றி கலெக்டர் கூறும்போது, ஜல்லிக்கட்டு விழாவிற்கு முன்னேற்பாடு பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து விட்டது. ஒரு சில பிரச்சினைகள் இருப்பதை சரி செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளோம். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 650 காளைகள் பங்கேற்க உள்ளன. 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்றார்.


Next Story