போகி பண்டிகையையொட்டி குப்பைகளை எரித்து, மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாகம்


போகி பண்டிகையையொட்டி குப்பைகளை எரித்து, மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாகம்
x
தினத்தந்தி 14 Jan 2020 10:00 PM GMT (Updated: 14 Jan 2020 8:12 PM GMT)

போகி பண்டிகையையொட்டி குப்பைகளை எரித்து, மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாகத்துடன் போகி பண்டிகையை கொண்டாடினர்.

மாமல்லபுரம், 

போகி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பல தெருக்களில் பொதுமக்கள் தங்கள் வீட்டின் வாசல் முன்பு பழைய பொருட்களை தீ வைத்து எரித்து, போகி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர். புராதன சின்னங்கள் அதிகமாக உள்ள மாமல்லபுரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் போட்டு எரிக்க வேண்டாம் என தொல்லியல் துறை வேண்டுகோள் விடுத்ததை அடுத்து பொதுமக்கள் இவற்றை போட்டு எரிப்பதை முற்றிலும் தவிர்த்தனர். 

ஆனாலும் பழைய பொருட்களை போட்டு தீ மூட்டியதால் அனைத்து சாலைகளிலும், தெருக்களிலும் பல மணி நேரம் புகை மண்டலமாக காட்சி அளித்தது. சிறுவர்கள் கூட்டம், கூட்டமாக ஆங்காங்கே குப்பைகளை தீ வைத்து எரித்து, மேளம் அடித்து உற்சாகத்துடன் காணப்பட்டனர். மாமல்லபுரம் அண்ணாநகர் பகுதி தெருக்களில் சிறுவர்கள் கூட்டம், கூட்டமாக நின்று மேளம் அடித்து உற்சாகத்துடன் போகி பண்டிகையை கொண்டாடினர். பல தெருக்களில் சிறுவர்கள் அடித்த மேள சத்தம் காதை பிளந்தது. மாசு கட்டுப்பாடு வாரியம் வழிப்புணர்வு ஏற்படுத்தியதை தொடர்ந்து மாமல்லபுரத்தில் பொதுமக்கள் பலரும் பிளாஸ்டிக் எரிப்பதை முற்றிலும் தவிர்த்தனர்.


Next Story