மண்டலவாடியில் அம்மா இளைஞர் விளையாட்டு மைதானம் திறப்பு விழா; 2 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்


மண்டலவாடியில் அம்மா இளைஞர் விளையாட்டு மைதானம் திறப்பு விழா; 2 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 17 Jan 2020 4:00 AM IST (Updated: 17 Jan 2020 2:20 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி கூட் ரோடு அருகே தமிழக அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், அம்மா இளைஞர் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடந்தது.

ஜோலார்பேட்டை, 

 திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் விழாவிற்கு தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ஆர்.ரமேஷ், ஜோலார்பேட்டை நகர அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி. சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தனர். முன்னதாக விளையாட்டு மைதானம் அருகே மரக்கன்றுகளை நட்டனர்.

அதன் பிறகு அமைச்சர் கே.சி.வீரமணி இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். விழாவில் திருப்பத்தூர் தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன், ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேம்குமார், சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story