பொங்கல் பண்டிகையையொட்டி பூலாம்வலசில் களைகட்டும் சேவல் சண்டை
பொங்கல் பண்டிகையையொட்டி பூலாம்வலசில் சேவல் சண்டை களைகட்டியுள்ளது. இதில் சேவல்களின் கால்களில் கட்டப்பட்ட கத்திகள் குத்தியதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
அரவக்குறிச்சி,
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பூலாம்வலசு கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையொட்டி நடைபெறும் சேவல் சண்டை எனும் சேவல் கட்டு நிகழ்ச்சி மிகவும் பிரபலமானதாகும். இங்கு சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சேவல் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் 2 சேவல்களை சண்டையிட செய்வார்கள். அதில் தோற்றுப்போகும் சேவலை வெற்றி பெற்ற சேவலின் உரிமையாளருக்கு கொடுத்து விடுவார்கள். தோற்றுப்போன சேவலை கோச்சை என்று அழைக்கின்றனர். சண்டையில் ஈடுபடுத்தப்படும் சேவல்கள் இங்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விலை போகிறது. சேவல்களில் செவளை, காகம், கீரி, நூலான், வல்லூறு, மயில், பேடு உள்பட பல வகைகள் உள்ளன. சண்டைச்சேவல்களை தனிக்கவனம் செலுத்தி கம்பு, கேழ்வரகு, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட சத்தான தானியங்களை உணவாக கொடுத்து வளர்க்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அரவக்குறிச்சி அருகே கோவிலூர் என்ற இடத்தில் நடந்த சேவல் சண்டையில், சேவல்களின் காலில் கத்தியை கட்டி மோத விட்டதில் கத்தி குத்தி பார்வையாளர்கள் 2 பேர் உயிர் இழந்தனர். இதையடுத்து கோவிலூர் மற்றும் பூலாம்வலசு கிராமத்தில் சேவல் சண்டை நடத்த நீதிமன்றம் தடை விதித்தது. அதன்பின்னர் கடந்த ஆண்டு நிபந்தனைக்கு உட்பட்டு சேவல் சண்டை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து கடந்த ஆண்டு சேவல் போட்டி நடைபெற்றது.
பார்வையாளர்கள் குவிந்தனர்
அதேபோல இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் சேவல் சண்டை தொடங்கியது. இதில் கரூர் மட்டுமின்றி திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பலர் சேவலுடன் வந்து கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் மட்டும் சுமார் 10 ஆயிரம் சேவல்கள் போட்டியில் கலந்து கொண்டன. 2-வது நாளான நேற்றும் அதே அளவுக்கு சேவல்கள் போட்டியில் கலந்து கொண்டன. பூலாம்வலசு கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் ஆங்காங்கே குழுகுழுவாக சேவல் சண்டை காலை முதல் மாலை வரை நடந்தது.
சண்டைக்கு முன்னதாக சேவல்களை கால்நடை மருத்துவ குழுவினர் போதை மருந்து கொடுக்கப்பட்டுள்ளதா? நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதா? என பரிசோதனை செய்து நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள சேவல்களை மட்டும் சண்டையில் பங்கேற்க அனுமதித்தனர். இந்த சண்டைகளை வேடிக்கை பார்க்க ஏராளான பார்வையாளர்கள் ஆர்வத்துடன் குவிந்துள்ளனர். இதனால் பூலாம்வலசு கிராமமே களைகட்டி உள்ளது. இந்த சேவல் சண்டை தொடர்ந்து இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கத்தி குத்தி 3 பேர் படுகாயம்
சேவல்களின் கால்களில் கத்தியை கட்டி மோதவிடுவது வழக்கம். ஆனால் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி பூலாம்வலசுவில் நேற்று முன்தினம் கத்தியை கட்டி சேவல்களை மோத விட்டுள்ளனர். இதில் சேவல்களின் கால்களில் கட்டப்பட்ட கத்தி குத்தியதில், பார்வையாளர்கள் திருச்சி மாவட்டம், தொட்டியம் புதூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 40), காங்கேயம் வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்த சுந்தராஜ் (39), திருப்பூர் கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (21) ஆகியோர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விதிமீறலில் ஈடுபட்டதாக அரவக்குறிச்சி பூலாம்வலசு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (39), காளிமுத்து (40), கார்த்திகேயன் (33), மாரியப்பன் (45), ராஜேந்திரன் (42), ரமேஷ் (39), வடிவேல் (39), முருகேசன் (44), மூர்த்தி (30), செந்தில்குமார் (41) ஆகிய 10 பேர் மீது அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி தாசில்தார் செந்தில் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் விதிமீறல்களை மீறி சேவல் சண்டை நடைபெற்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இந்தநிலையில் நேற்று நடந்த சேவல் சண்டையிலும் ஒருசில சேவல்களின் கால்களில் கத்திகள் கட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story