திருப்பரங்குன்றம் அருகே, இளவட்டக்கல் போட்டியில் அசத்திய பெண்
இளவட்டக் கல்லை தூக்கும் போட்டியில் பெண் ஒருவர் விடா முயற்சி செய்து அசத்தினார்.
திருப்பரங்குன்றம்,
மதுரை திருநகரில் உள்ள அண்ணா பூங்கா விளையாட்டு மைதானத்தில் பாரம்பரிய விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊர்வன அமைப்பாளர்கள் சகா.விஷ்வா ஆகியோர் தலைமை தாங்கினார் விழாவில் மாணவ, மாணவிகளுக்கு ஓட்டப் பந்தயம், சாக்குப்பை ஓட்டம், மித வேகத்தில் சைக்கிள் ஓட்டம், சிறிய கரண்டியில் எலுமிச்ச பழம் எடுத்தல், பாட்டிலில் கையால் தண்ணீர் நிரப்புதல் என்று பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன
தமிழ் கலாசாரத்தை நினைவூட்டும் விதமாக பாரம்பரிய விளையாட்டுபோட்டிகள் நடத்தப்பட்டன. அதில் உலகத்திலேயே உற்று நோக்கக்கூடிய கிரிக்கெட்டிற்கு முன்னோடி விளையாட்டான கில்லி (கிட்டி)க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது மேலும் மறந்துபோன சைக்கிள் “டயரை” ஓட்டுதல், ஒரு வட்டத்திற்குள் பம்பரம் சுற்றுதல் போட்டி நடந்தது.
இதற்கிடையே வழுக்கு மரம் ஏறுதல் போட்டியில் 30-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். திருநகர் இந்திரா காந்தி மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் அமலா கான்வென்ட் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் விக்கி ஆகிய 2 பேரும் மரத்தின் உச்சியை தொட்டு அசத்தி பார்வையாளர்களை வியக்க செய்தனர்.
உறியடித்தல் போட்டியில் 7-ம் வகுப்பு மாணவன் அம்சவர்த்தன்வென்றார்.
இளைஞர்களுக்காகவே நடத்தக்கூடிய போட்டி “இளவட்டக்கல்”தூக்கும்போட்டி. இந்தப் போட்டியில் பார்வையாளராக கலந்து கொண்ட சுகிர்தம் (வயது 45) என்ற பெண் மைதானத்தில் களம் இறங்கி இளவட்டக் கல்லை தூக்குவதற்கு முயன்றார். அவர் சுமார் 5 நிமிடம் வரை இளவட்டக் கல்லை தூக்குவதில் விடா முயற்சி செய்து அசத்தினார். இதை சற்றும் எதிர்பாராத சகபார்வையாளர்கள் வியந்தனர். இதில் போட்டியின் நிபந்தனைக்கு ஏற்ப திருநகரைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர் இளவட்டக் கல்லை தூக்கி எறிந்து பரிசை தட்டி சென்றார்.
Related Tags :
Next Story