பொங்கல் விளையாட்டு போட்டியில் மோதல் : 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து
பொங்கல் விளையாட்டு போட்டியில் ஏற்பட்ட மோதலில் 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து விழுந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை,
கோவை புலியகுளம் அம்மன் குளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. கபடி போட்டியில் வெற்றி பெற்ற நவீன்குமார் அணிக்கு பரிசு வழங்கப்பட்டது.அவர்களிடம் தோல்வி அடைந்த அணிக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார்(வயது23), அவருடைய தம்பி கண்ணன்(20), ஹரிகரன்(23), ஆகியோர் பேசி உள்ளனர்.
இதனால் இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.இதில்ஆத்திரம் அடைந்த விஜயகுமார் தரப்பினர், வடவள்ளியை சேர்ந்த நவீன்குமார்(வயது23), திருச்சி ரோடு ஹைவேஸ் காலனியை சேர்ந்த லோகேசுவரன்(24) ஆகியோரை கத்தியால் சரமாரியாக குத்தினர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவர்கள் 2 பேரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தார். அவருடைய தம்பி கண்ணனை போலீசார் தேடி வருகிறார்கள்.
கத்திக்குத்துப்பட்ட நவீன்குமார், கைதான விஜயகுமார் ஆகியோர் மீது கஞ்சா வழக்குகள் உள்ளன. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்துக்கு பழி தீர்க்க பொங்கல் விளையாட்டு போட்டியை பயன்படுத்தி கத்திக்குத்து சம்பவம் நடந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story