மேல்மலையனூர் அருகே, இருதரப்பினர் மோதல்; 12 பேர் மீது வழக்குப்பதிவு - வாலிபர் கைது


மேல்மலையனூர் அருகே, இருதரப்பினர் மோதல்; 12 பேர் மீது வழக்குப்பதிவு - வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 Jan 2020 4:00 AM IST (Updated: 18 Jan 2020 12:49 AM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூர் அருகே இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், வாலிபர் ஒருவரை கைது செய்தனர்.

மேல்மலையனூர், 

மேல்மலையனூர் அருகே உள்ள தாதங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாசாமி. இவரது மனைவி விஜயலட்சுமி(வயது 36). இவர்களது வீட்டின் அருகே வசித்து வருபவர் புகழேந்தி(32). இவர்களுக்கிடையே முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில் விஜயலட்சுமி, அந்த பகுதியில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். 

அப்போது புகழேந்தி தனது ஆதரவாளர்களான ராமதாஸ், ராமன், உலகநாதன் ஆகியோருடன் சேர்ந்து விஜயலட்சுமியை வழிமறித்து திட்டி, தாக்கி உள்ளனர். தொடர்ந்து அண்ணாசாமி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து புகழேந்தி தரப்பினரிடையே தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர்.

இது தொடர்பாக விஜயலட்சுமி வளத்தி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் புகழேந்தி, ராமதாஸ், ராமன், உலகநாதன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, புகழேந்தியை கைது செய்தனர். 

இதேபோல் புகேழந்தியின் தம்பி தசரதன் கொடுத்த புகாரின் பேரில், அண்ணாசாமி, அவரது ஆதரவாளர்களான விஜயன், கன்னியப்பன், தமிழ்வாணன், ஏழுமலை, சிவக்குமார், சபாபதி, கமலக்கண்ணன் ஆகியோர் மீது புகார் செய்தார். அதன்பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள 11 பேரையும் தேடி வருகின்றனர்.

Next Story