ராகுல்காந்தியை விமர்சித்து வீடியோ வெளியிட்ட சினிமா கலை அகாடமி இயக்குனரின் கட்டாய விடுப்பை ரத்து செய்யுங்கள் உத்தவ் தாக்கரேக்கு, பட்னாவிஸ் கடிதம்


ராகுல்காந்தியை விமர்சித்து வீடியோ வெளியிட்ட சினிமா கலை அகாடமி இயக்குனரின் கட்டாய விடுப்பை ரத்து செய்யுங்கள் உத்தவ் தாக்கரேக்கு, பட்னாவிஸ் கடிதம்
x
தினத்தந்தி 18 Jan 2020 5:45 AM IST (Updated: 18 Jan 2020 5:44 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பட்னாவிஸ் கடிதம் எழுதி உள்ளார்.

மும்பை, 

ராகுல்காந்தியை விமர்சித்து வீடியோ வெளியிட்ட சினிமா கலை அகாடமி இயக்குனரின் கட்டாய விடுப்பை ரத்து செய்யுங்கள் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பட்னாவிஸ் கடிதம் எழுதி உள்ளார்.

கட்டாய விடுப்பு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘ரேப் இன் இந்தியா' என்ற பேச்சுக்கு மன்னிப்பு கேட்க தன்னுடைய பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல, ராகுல்காந்தி என டெல்லியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். மராட்டியத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கர் பற்றிய அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது நடிகரும், நாடக ஆசிரியரும், மும்பை பல்கலைக்கழகத்தின் சினிமா கலை அகாடமி இயக்குனருமான யோகேஷ் சோமன் ராகுல்காந்தியை விமர்சித்தும், வீர சாவர்க்கரை புகழ்ந்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இதை கண்டித்து மாணவர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மும்பை பல்கலைக்கழகம் யோகேஷ் சோமனை கட்டாய விடுப்பில் அனுப்பியது.

பட்னாவிஸ் கடிதம்

இந்த நிலையில் யோகேஷ் சோமன் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வீர சாவர்க்கரை புகழ்ந்ததற்காக யோகேஷ் சோமன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது துரதிருஷ்டவசமானது.

வீர சாவர்க்கரின் சித்தாந்தத்தை நம்பும் ஒரு முதல்-மந்திரியின் ஆட்சி நடக்கும்போது, அத்தகைய தண்டனை எதிர்பார்க்கப்படுவதில்லை. எந்தவொரு அரசியல் அழுத்தத்திற்கும் ஆளாகாமல் இந்த பிரச்சினையில் தலையிட்டு யோகேஷ் சோமனின் கட்டாய விடுப்பை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story