நாட்டு மக்களுக்கு மோடி நல்லாட்சி வழங்குவது எதிர்க்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை ஷோபா எம்.பி. பேச்சு
நாட்டு மக்களுக்கு மோடி நல்லாட்சி வழங்குவது எதிர்க்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை என்று ஷோபா எம்.பி. கூறினார்.
சிக்கமகளூரு,
நாட்டு மக்களுக்கு மோடி நல்லாட்சி வழங்குவது எதிர்க்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை என்று ஷோபா எம்.பி. கூறினார்.
அரசியல் லாபம்
சிக்கமகளூரு டவுன் மூடிகெரே ரோட்டில் உள்ள போலராமேஸ்வரா கோவிலில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை குத்துவிளக்கேற்றி ஷோபா எம்.பி. தொடங்கி வைத்தார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் காலத்திலேயே குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அவர்களால் அதை செய்ய முடியவில்லை.
பிரதமர் மோடி குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றி உள்ளதால் அதை காங்கிரஸ் கட்சியினரால் பொறுத்து கொள்ள முடியவில்லை. குடியுரிமை திருத்த சட்டம் பற்றி நாட்டு மக்களிடையே தவறான பிரசாரம் செய்து அதன் மூலம் அரசியல் லாபம் பெற காங்கிரஸ் கட்சி முயற்சி செய்து வருகிறது.
3 சதவீதமாக...
குடியுரிமை திருத்த சட்டத்தில் உள்ள நன்மை குறித்து பொதுமக்களுக்கு எடுத்து கூற காங்கிரஸ் முன்வரவில்லை. பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கி வருகிறார். ஆனால் இது எதிர்க்கட்சி களுக்கு பிடிக்கவில்லை.
வெளிநாடுகளில் தங்கி உள்ள இந்தியர்கள் விசா காலம் முடிந்ததும் உடனடியாக நாட்டிற்கு திரும்பி வந்து விடுகிறார்கள். ஆனால் நமது நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினர் விசா காலம் முடிந்தும் சொந்த நாட்டிற்கு திரும்பி செல்லாமல் உள்ளனர். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ஒரு காலத்தில் இந்தியர்கள் 27 சதவீதம் பேர் இருந்தனர். ஆனால் அது தற்போது 3 சதவீதமாக குறைந்து உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story