தாளவாடி அருகே, குட்டியுடன் வாகனங்களை மறித்த யானைகள் - போக்குவரத்து பாதிப்பு


தாளவாடி அருகே, குட்டியுடன் வாகனங்களை மறித்த யானைகள் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 19 Jan 2020 3:45 AM IST (Updated: 19 Jan 2020 12:40 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே குட்டியுடன் வாகனங்களை மறித்த யானைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி, 

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், தாளவாடி, தலமலை, ஜீர்கள்ளி, ஆசனூர், கேர்மாளம், கடம்பூர், டி.என்.பாளையம், பவானிசாகர், விளாமுண்டி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்ெடருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

தற்போது வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன. மேலும் யானைகள் அடிக்கடி வனச்சாலைகளை கடந்து செல்கின்றன.

தாளவாடியை அடுத்த தலமலை வனச்சரகத்துக்கு உள்பட்ட திம்பம் வனச்சாலை அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் குட்டியுடன் 2 யானைகள் திம்பம் வனச்சாலையில் உள்ள ராமரணை பகுதிக்கு வந்தன. பின்னர் அந்த யானைகள் அங்குள்ள ரோட்டின் நடுவிலேயே நின்று கொண்டிருந்தன.

ரோட்டை மறித்தபடி யானைகள் நின்றதை கண்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை சிறிது தூரத்திலேயே நிறுத்திவிட்டனர். 30 நிமிட நேரம் ரோட்டிலேயே நின்றுகொண்டிருந்த யானைகள் பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன. இதன்காரணமாக அந்த ரோட்டில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story