மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா + "||" + Mgr. Birthday party

மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா

மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நாமக்கல்,

நாமக்கல் நகர அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னதாக நாமக்கல்லில் உள்ள பரமத்தி சாலையில் இருக்கும் எம்.ஜி.ஆர். சிலைக்கு பாஸ்கர் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.


இதேபோல் நாமக்கல்லில் முக்கிய சாலைகளில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைகள் மற்றும் நகரில் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படங்களுக்கு கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இதில் நாமக்கல் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜா என்ற செல்வகுமார், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் விஜய்பாபு மற்றும் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சேந்தமங்கலம்

சேந்தமங்கலத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு சந்திரசேகரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைதொடர்ந்து அவர் அ.தி.மு.க. கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பேசினார். அப்போது சேந்தமங்கலம் மேட்டு தெருவை சேர்ந்த பாலகிரு‌‌ஷ்ணன் என்பவருக்கு நிதி உதவி வழங்கினார்.

இதில் ஒன்றிய துணை செயலாளர் ஜி.கே.வீரப்பன், பேரூர் கழக செயலாளர் ராஜேந்திரன், துணை செயலாளர் கென்னடி, முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், மீனவரணி செயலாளர் பாஸ்கர், மாணவரணி செயலாளர் செந்தில்குமார், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ரமே‌‌ஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராசிபுரம்

ராசிபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. புதிய நிலையம் அருகே நடந்த விழாவிற்கு நகர கூட்டுறவு வங்கித்தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் ராமசாமி, பொருளாளர் கோபால், நகர கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து கட்சி கொடியை ஏற்றி, அங்கிருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதையடுத்து 27 வார்டிலும் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் அவர் கலந்து கொண்டு கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில் நகர இளைஞர் அணி செயலாளர் சீனிவாசன், முன்னாள் கவுன்சிலர்கள் சீரங்கன், ரமே‌‌ஷ் அமல்ராஜ், ஸ்ரீதர், ஜெகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் வக்கீல் பிரபு, மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் ராதாசந்திரசேகர், குமார், பார்த்தீபன், வி.நகர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிலைக்கு மாலை

முன்னதாக ராசிபுரம் அருகே கட்டனாச்சம்பட்டியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை மற்றும் பட்டணத்தில் உள்ள எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு அவர் மாலை அணிவித்தார். இதில் வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் வக்கீல் தாமோதரன், ராசிபுரம் ஒன்றிய செயலாளர் காளியப்பன், பட்டணம் பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியம், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் புதுப்பட்டியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நாமகிரிபேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மணி மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதேபோல நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. தேன்கனிக்கோட்டை அருகே 100 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழா
தேன்கனிக்கோட்டை அருகே 100 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழா நடைபெற்றது.
2. வம்பாகீரப்பாளையம், பூரணாங்குப்பத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக்கொள்ளை விழா
வம்பாகீரப்பாளையம், பூரணாங்குப்பத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில் மயானக்கொள்ளை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
3. ராமநாதபுரம் அருகே ஆற்றாங்கரை கருப்பணசாமி கோவிலில் மாசி களரி விழா
ராமநாதபுரம் அருகே உள்ள ஆற்றாங்கரை கருப்பணசாமி கோவிலில் மாசி களரி விழா நடைபெற்றது. இதில் லட்சுமி நாச்சியார் களஞ்சியம் அன்னதானம் வழங்கினார்.
4. தலைவாசலில், சர்வதேச தரத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்
தலைவாசலில் சர்வதேச தரத்தில் அமைய உள்ள கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
5. முருகன் கோவில்களில் தைப்பூச விழா கோலாகலம் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
முருகன் கோவில்களில் தைப்பூச விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை