அச்சரப்பாக்கம் அருகே, ரெயில்வே கேட் கீப்பரை தாக்கிய 3 பேர் கைது


அச்சரப்பாக்கம் அருகே, ரெயில்வே கேட் கீப்பரை தாக்கிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 19 Jan 2020 4:00 AM IST (Updated: 19 Jan 2020 3:56 AM IST)
t-max-icont-min-icon

அச்சரப்பாக்கம் அருகே ரெயில்வே கேட் கீப்பரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு, 

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ரெயில்வே கேட்டில் கேட் கீப்பராக சரவணன் (வயது 43) என்பவர் வேலை பார்த்து வருகிறார் இந்த நிலையில் நேற்று காலை ரெயிலின் வருகைக்காக ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தது.

அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் ரெயில்வே கேட்டை திறக்கும்படி சரவணனிடம் கேட்டனர். அதற்கு ரெயில்வே ஊழியர் சரவணன் ரெயில் போன பிறகுதான் கேட்டை திறக்க முடியும் என்று கூறியுள்ளார்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கேட்கீப்பர் சரவணனை தாக்கியுள்ளனர். இது குறித்து சரவணன் செங்கல்பட்டு ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக அச்சரப்பாக்கத்தை அடுத்த கரசங்கால் பகுதியை சேர்ந்த ஜெகதீசன் (24), கருணாகரன் (23), வல்லரசு (24) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story