வெங்கடேசபுரத்தில் மின்கம்பம் மீது லாரி மோதல்; கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்தது
பெரம்பலூர் அருகே வெங்கடேசபுரத்தில் மின்கம்பம் மீது லாரி மோதியதால் கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்தது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் கியாஸ் சிலிண்டர் விற்பனை செய்யும் ஏஜென்சி ஒன்று உள்ளது. அந்த ஏஜென்சிக்கு நேற்று காலை திருச்சியில் இருந்து லாரி மூலம் கியாஸ் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டது. அப்போது டிரைவர் லாரியை பின்னால் இயக்கி போது சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில் மின்கம்பம் முறிந்து சரிந்ததில் மின்சார கம்பிகள் லாரியில் இருந்த ஒரு கியாஸ் சிலிண்டர் மீது விழுந்ததில் தீப்பிடித்து எரிந்தது.
புதிய மின்கம்பம்
இதனை கண்ட லாரி டிரைவர் உடனடியாக இதுகுறித்து மின்வாரிய அதிகாரிக்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை நிறுத்தி, கியாஸ் சிலிண்டர் மீது எரிந்து கொண்டிருந்த தீயை தீயணைப்பான் கருவி மூலம் அணைத்தார். கியாஸ் சிலிண்டர் மீது எரிந்த தீயை உடனடியாக அணைத்ததால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. சரிந்து விழுந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்தி, புதிய மின்கம்பம் அமைக்கும் பணி நடைபெற்றதால் வெங்கடேசபுரம் பகுதியில் மதியம் வரை மின்தடை ஏற்பட்டது.

Related Tags :
Next Story