தர்மபுரி, கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்


தர்மபுரி, கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
x
தினத்தந்தி 19 Jan 2020 10:45 PM GMT (Updated: 19 Jan 2020 6:52 PM GMT)

தர்மபுரி, கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தடங்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். முகாமில் தடங்கம், கக்கன்ஜிபுரம், பெருமாள் கோவில்மேடு உள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து பெற்று சென்றனர்.

இண்டூர் பஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சாலா கன்னியப்பன் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். இதில் ஊராட்சி செயலர் கணேசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரூர்

அரூர் பஸ் நிலையத்தில் சம்பத்குமார் எம்.எல்.ஏ. ஒரு குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். இதில் உதவி கலெக்டர் பிரதாப், மாவட்ட அரசு வழக்கறிஞர் பசுபதி மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் பாபு, வேலு, பா‌ஷா, சிவன், சேகரன், டாக்டர்கள் தொல்காப்பியன், அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் கோட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுசுயா காமராஜ் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். இதில் டாக்டர்கள் சிலம்பரசன், அருண்பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம்

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் ரவி தலைமை தாங்கினார், மாவட்ட பால்வள தலைவர் குப்புசாமி முன்னிலை வகித்தார். முன்னதாக ஒன்றிய செயலாளர் கிரு‌‌ஷ்ணன் வரவேற்று பேசினார். நகர செயலாளர் வாசுதேவன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கீதா கேசவன் ஆகியோர் கலந்துகொண்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ரெட் கிராஸ் செயலாளர் செந்தில், மருத்துவர் சோமசுந்தரம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சவிதா, விக்ரம் குமார், அம்பிகா, சரவணன், கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் ஹரிராம் நன்றி கூறினார்.

ராயக்கோட்டை, வேப்பனப்பள்ளி

ராயக்கோட்டையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. பஸ் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில், ராயக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மூர்த்தி, சுகாதார மேற்பார்வையார் ஏகாம்பரம் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

வேப்பனப்பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குழந்தைக்கு சொட்டு மருந்தை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

இதில், சேர்மன் சரோஜினி மகே‌‌ஷ், ஒன்றிய செயலாளர் ரகுநாத், தலைவர் கலில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story