சுரண்டை அருகே, மனைவியை கணவன் முதுகில் சுமந்து ஓடும் போட்டி - பொங்கல் விளையாட்டு விழாவில் ருசிகரம்
சுரண்டை அருகே வீரசிகாமணியில் நடந்த பொங்கல் விளையாட்டு விழாவில் ருசிகரமாக, மனைவியை கணவன் முதுகில் சுமந்து ஓடும் போட்டி நடைபெற்றது.
சுரண்டை,
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீரசிகாமணி கிராமத்தில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் 23-வது பொங்கல் விளையாட்டு விழா நடத்தப்பட்டது.
இதில் சிறுவர்-சிறுமியர்கள், பெரியவர்கள் கலந்துகொண்ட இசை நாற்காலி போட்டி, பானை உடைத்தல், உறியடித்தல், இளவட்டக்கல் தூக்குதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
பொங்கல் விளையாட்டு விழாவின் சிகர நிகழ்ச்சியாக திருமணமான ஆண்கள் தங்களது மனைவியை முதுகில் சுமந்து ஓடும் போட்டி நடந்தது. இதில் மொத்தம் 5 தம்பதியினர் கலந்துகொண்டனர்.
ருசிகரமான முறையில் நடைபெற்ற இப்போட்டி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. வித்தியாசமான இந்த போட்டியானது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Related Tags :
Next Story