பெரியார் பற்றிய பேச்சு: ரஜினிகாந்த் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது - எச்.ராஜா பேட்டி
பெரியார் பற்றி பேசியது குறித்து ரஜினிகாந்த் மீது சட்டப்படி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று காஞ்சீபுரத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டியளித்தார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா சென்றார். அங்கு அம்பாளை தரிசித்தார். அவருக்கு கோவில் சார்பில் பொன்னாடை, மாலை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை போல தமிழகத்திலும் சில அமைப்புகளை உடனடியாக தடை செய்ய வேண்டும். நெல்லை கண்ணனுக்கு டெல்லியில் இருக்கக் கூடிய தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
ரஜினிகாந்த் உண்மையை கூறி இருக்கிறார்.
வீரமணி, சுப வீரபாண்டியன் போன்றோர் இந்து மதத்துக்கு எதிரானவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்து மதத்திற்கு எதிரான செயல்களில் பெரியார் ஈடுபட்டுள்ளார். அதில் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை மட்டுமே ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இதில் பெரியாரின் புகழ் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்று எனக்கு தெரியவில்லை.
எனவே இந்த மிரட்டல்களுக்கெல்லாம் ரஜினிகாந்த் கவலைப்பட தேவையில்லை ஊடகங்களின் பார்வை தங்கள் மீது விழ வேண்டும் என்பதற்காகவே புகார்களை திராவிடர் கழகத்தினர் போலீஸ் நிலையத்தில் கொடுத்து வருகிறார்கள். ரஜினிகாந்த் மீது சட்டப்படியான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது. எனவே இந்த பிரச்சினை குறித்து கவலைப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story