சிறுமியை கற்பழித்த 2 வாலிபர்களுக்கு தலா 20 ஆண்டு கடுங்காவல் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியை கற்பழித்த வாலிபர்கள் 2 பேருக்கு தலா 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மும்பை,
சிறுமியை கற்பழித்த வாலிபர்கள் 2 பேருக்கு தலா 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
சிறுமி கற்பழிப்பு
தென்மும்பை பகுதியில் உள்ள நடைபாதையில் 13 வயது சிறுமி தாயுடன் வசித்து வந்தாள். சிறுமியை கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 21-ந் தேதி சுற்றுலா வழிகாட்டிகளான சாய்பாஜ் சேக் (வயது20) மற்றும் இஸ்ரத் சேக் (20) ஆகியோர் பொது கழிப்பறைக்கு அழைத்து சென்று கற்பழித்தனர்.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் 2 வாலிபர்கள் மீதும் போக்சோ சட்டத் தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
20 ஆண்டு ஜெயில்
மேலும் வாலிபர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
இதில் வழக்கை விசாரித்த கோர்ட்டு சிறுமியை கற்பழித்த 2 வாலிபர்களுக்கும் தலா 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.12 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.
Related Tags :
Next Story