போலியோ சொட்டு மருந்து முகாம்: அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்


போலியோ சொட்டு மருந்து முகாம்: அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 Jan 2020 11:00 PM GMT (Updated: 19 Jan 2020 11:51 PM GMT)

போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

மதுரை, 

தமிழ்நாட்டில் மக்கள் நல்வாழ்வுதுறை மூலமாக போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடைபெற்றது. மதுரை மாநகராட்சி செல்லூர் பல்நோக்கு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமினை நேற்று காலை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டு 3,11,725 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 43,051 முகாம்களிலும், மதுரை மாவட்டத்தில் 1,705 முகாம்களிலும், மதுரை மாநகராட்சியில் 462 முகாம்களிலும், 2 நடமாடும் மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் சுற்றுலா வந்துள்ள வெளிநாடு மற்றும் பிற மாநில குழந்தைகளுக்கும், இடம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காகவும், இலங்கை அகதிகள் முகாம்களிலும், நரிக்குறவர் குடியிருப்புகளிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

வளர்ந்த நாடுகளில் போலியோ ஒழிந்த நாடுகளில் நம்முடைய இந்தியாவும் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை ஆண்டுக்கு 2 முறை வழங்கி வந்த போலியோ சொட்டு மருந்து இந்த ஆண்டு முதல் ஒரு முறை வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் 7412 பணியாளர்களும், மதுரை மாநகராட்சியில் 674 சுகாதாரத் துறை பணியாளர்களும், 1134 தன்னார்வ பணியாளர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., நகர் நல அலுவலர் செந்தில்குமார், இணை இயக்குனர் (சுகாதாரம்) பிரியாராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முகாம் நடந்தது. சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் அழகுராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி மேற்பார்வையில் மருத்துவர்கள் உள்பட 360 பேர் இந்த சொட்டு மருந்துகளை சுமார் 90 மையங்களில் 10 ஆயிரத்து 780 குழந்தைகளுக்கு வழங்கினர்.

மேலும் இதே மருத்துவமனையில் யூனியன் தலைவர் பஞ்சு அழகு, துணை தலைவர் சங்கீதாமணிமாறன் ஆகியோர் குழந்தைகளுக்கு சொட்டு மருந்துகளை வழங்கினர்.

மேலூர்

மேலூர் நகராட்சி மற்றும் மேலூர் அரசு மருத்துவமனை சார்பில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இந்த பணியை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், மேலூர் நகராட்சி ஆணையாளர் ரத்தினவேல், மேலூர் யூனியன் தலைவர் பொன்னுசாமி, மேலூர் நகர் அ.தி.மு.க. செயலாளர் பாஸ்கரன், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பெரியசாமி, மேலூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் சாகுல் ஹமீது, மேலூர் அரசு தலைமை மருத்துவர் ஸ்ரீபிரியா தேன்மொழி, டாக்டர்கள் முரளிபால், கண்ணன், செந்தில்குமார், அய்யன்ராஜ், வள்ளாலப்பட்டி டாக்டர்கள் ராஜ்குமார், பாலாஜி, நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சுவர்ணப் பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம்

மதுரை கிழக்கு யூனியன் கல்மேடு பகுதியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சூரிய கலாநிதி போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தொடங்கி வைத்தார்.

திருப்பரங்குன்றம்நகர்புற மருத்துவமனையில் டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ. போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.

திருப்பரங்குன்றம் அருகே உள்ள வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருப்பரங்குன்றம் யூனியன் தலைவர் வேட்டையன் சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.

டி.கல்லுப்பட்டி

டி.கல்லுப்பட்டி, எம்.சுப்புலாபுரம், சந்தையூர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட 73 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. பேரையூர், டி.கல்லுப்பட்டியில் பஸ் நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகிய இடங்களில் டாக்டர்கள் பாண்டியராஜன், சுரேகா தலைமையில் சுகாதார குழுவினர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கினார்கள். முன்னதாக டி.கல்லுப்பட்டி யூனியன் தலைவர் சண்முகப்பிரியா மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் போலியோ சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்தனர். ஒன்றியத்தில் 8800 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

சோழவந்தான்

சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அரசு தலைமை மருத்துவர் தீபா போலியோ சொட்டு மருந்து வழங்கினார். இதில் விவேகானந்தா கல்லூரி முதல்வர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

சோழவந்தான் பஸ் நிலையத்தில் மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக டாக்டர் கிசா மகேஷ் தலைமையில் சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. முள்ளிப்பள்ளம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல், மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பவுன்முருகன், ஒன்றிய கவுன்சிலர் ரேகாவீரபாண்டி, டாக்டர் அருண் கோபி மற்றும் சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், கருப்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகா, ஒன்றிய கவுன்சிலர் தங்கப்பாண்டி, இரும்பாடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரிபண்ணைசெல்வம், ஒன்றிய கவுன்சிலர் தியாகு முத்துப்பாண்டி, நாச்சிகுளம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுகுமாறன், ஒன்றிய கவுன்சிலர் வக்கீல் தங்கப்பாண்டி, திருவேடகம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள்ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் வசந்த கோகிலாசரவணன், மேலக்கால் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி வீரபத்திரன், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி, விக்கிரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊராட்சிமன்ற தலைவர் கலியுகநாதன், ஊராட்சி செயலாளர் பால்பாண்டி, பானாமூப்பன்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜன், எரவார்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி, சக்கரப்பநாயக்கனூரில் ஜென்சிராணி, தேனூர் கிராமத்தில் ஊராட்சிமன்ற தலைவர் பாலு என்ற ஆதிமூலம் ஆகியோர் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்கள்.

காஞ்சரம் பேட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கு யூனியன் தலைவர் வீரராகவன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். யூனியன் துணை தலைவர் கார்த்திக் ராஜா, பெரிய பட்டி ஊராட்சி மன்ற தலைவர் குட்டிமுத்து குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. பிரமுகர்கள் ராஜா, ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். டாக்டர் இந்துமதி, சுகாதார ஆய்வாளர் முத்துப் பாண்டி உள்பட மருத்துவ பணியாளர்கள் இதில் பணியாற்றினர்.

வாடிப்பட்டி

வாடிப்பட்டி வட்டார அளவில் 97 மையங்களில் 1039 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டது. கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் மனோஜ்பாண்டியன் தலைமையில் கூட்டுறவு சங்க தலைவர் உங்குசாமி, ஊராட்சிமன்ற தலைவர் ஆலயமணி ஆகியோர் முன்னிலையில் மாணிக்கம் எம்.எல்.ஏ., சொட்டுமருந்து முகாமினை தொடங்கிவைத்தார்.

இதில் டாக்டர்கள் செல்வராஜ், தஸ்லீன்பானு, சந்திரபிரபா, வட்டாரசுகாதாரமேற்பார்வையாளர் முனியசாமி, சுகாதார ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், பொன்முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். வாடிப்பட்டி பஸ்நிலையத்தில் வட்ட சட்ட பணிகள் குழு உதவியாளர் சண்முகவள்ளி சொட்டுமருந்து வழங்கினர். மேலும் 23 ஊராட்சிமன்ற தலைவர்களும் அந்தந்த ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் சொட்டுமருந்துகளை வழங்கினர். விராலிப்பட்டி ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட சிறுமலை மீனாட்சிபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மலைவாழ்மக்களின் குழந்தைகளுக்கு சுகாதாரஆய்வாளர் சுந்தரராஜன் தலைமையில் சொட்டுமருந்து வழங்கப்பட்டது.


Next Story