மாவட்ட செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதல்: புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் பலி + "||" + Omni bus collision on government bus near Ulundurpet

உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதல்: புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதல்: புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதியதில் புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் பலியாகினர்.
உளுந்தூர்பேட்டை,

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள அம்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஐசக் அய்யா (வயது 54). இவர் அகில இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவராக இருந்து வருவதோடு, கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இவரது மகன் ராஜன் விண்ணரசு(வயது 24), கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வந்தார்.


இந்த நிலையில் ராஜன் விண்ணரசுக்கு நேற்று முன்தினம் தூத்துக்குடியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து நிச்சயதார்த்தம் முடிந்ததும் ஐசக் அய்யா, தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் 2 கார்களில் தூத்துக்குடியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார்.

வாக்குவாதம்

நேற்று அதிகாலை 3 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த எறஞ்சி திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து சென்னை நோக்கி பயணிகளுடன் வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக ஐசக் அய்யா குடும்பத்தினர் சென்ற கார் மீது உரசியபடி சென்றது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஐசக் அய்யா குடும்பத்தினர் காரை சாலையில் நிறுத்திவிட்டு, அரசு பஸ்சுக்கும், காருக்கும் இடையே நின்றபடி பஸ் டிரைவருடன் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பயணிகள் சிலர் பஸ்சில் இருந்து இறங்கி அங்கு நடந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

4 பேர் பலி

அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் ஆம்னி பஸ், கண் இமைக்கும் நேரத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பஸ்சின் பின்னால் பயங்கரமாக மோதியது. ஆம்னி பஸ் மோதிய வேகத்தில், அரசு பஸ் முன்னோக்கி வேகமாக நகர்ந்து சாலையில் நின்று கொண்டிருந்த கார் மீது மோதியது. அப்போது அரசு பஸ்சுக்கும், காருக்கும் இடையே நின்று கொண்டிருந்த ராஜன் விண்ணரசு மற்றும் அரசு பஸ்சில் வந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி(39), அறந்தாங்கியை சேர்ந்த சண்முகநாதன் மகன் அருண்பாண்டியன்(30), காஞ்சீபுரம் மாவட்டம் களத்தூரை சேர்ந்த சற்குணம்(39) ஆகிய 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீவிர சிகிச்சை

ஐசக் அய்யா, அவரது காரை ஓட்டி வந்த அரக்கோணத்தை சேர்ந்த டிரைவர் வினோத்(25), அரசு பஸ் டிரைவர் திருச்சி துறையூரை சேர்ந்த கோவிந்தராஜ்(37), கரூர் மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த கண்டக்டர் சுப்பிரமணியன்(30), தஞ்சாவூரை சேர்ந்த முருகானந்தம்(29), புதுக்கோட்டை மாவட்டம் ஆயிங்குடியை சேர்ந்த தினேஷ்குமார்(32) உள்ளிட்ட 22 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த கோர விபத்து பற்றி தகவல் அறிந்ததும் எடைக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையிலான போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதற்கிடையே விபத்தில் பலியான 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு, விபத்துக்குள்ளான வாகனங்கள் அனைத்தும் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தர பிரதேசத்தில் லாரி மீது பேருந்து மோதல்; 12 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் லாரி மீது பேருந்து மோதியதில் 12 பேர் பலியாகி உள்ளனர்.
2. எலச்சிபாளையத்தில் கார் மோதி டிரைவர் பலி
எலச்சிபாளையத்தில் கார் மோதி லாரி டிரைவர் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. சாலையோரம் நின்ற வேன் மீது பஸ் மோதல்; 3 பெண்கள் பலி வடமாநில சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த துயரம்
சாலையோரம் நின்ற வேன் மீது பஸ் மோதிய விபத்தில் 3 பெண்கள் பலியானார்கள். மேலும் அவர்களுடன் வந்த 10 பேர் காயம் அடைந்தனர். வடமாநிலத்தில் இருந்து சுற்றுலா வந்தவர்களுக்கு இந்த துயரம் நிகழ்ந்தது.
4. மதுரை ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணியில் விபத்து: கான்கிரீட் கலவை லாரி சக்கரத்தில் நசுங்கி 3 தொழிலாளர்கள் பலி
மதுரையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்துக்காக இரவுப்பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் ஓய்வுக்காக சற்று நேரம் தூங்கிய போது, கான்கிரீட் கலவை லாரியின் சக்கரத்தில் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
5. நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி அண்ணன்-தங்கை பலி; 7 பேர் படுகாயம்
பள்ளிகொண்டா அருகே நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் அண்ணன்-தங்கை பரிதாபமாக இறந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.