மாவட்ட செய்திகள்

ஆர்.கே.பேட்டை அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Near RKBate Young girl commits suicide by hanging

ஆர்.கே.பேட்டை அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஆர்.கே.பேட்டை அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஆர்.கே.பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே. பேட்டை அருகே கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சர்தார் (வயது 34). எலக்ட்ரீசியன். இவரது மனைவி மஹிமா (28). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நேற்றுமுன்தினம் மஹிமா தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுகுறித்து ஆர்.கே. பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மஹிமா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கணவன் மனைவிக்கு இடையே ஏதாவது தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இளம்பெண்ணுக்கு செல்போனில் தொல்லை: தட்டிக்கேட்ட பூசாரிக்கு கத்திக்குத்து; 2 பேர் கைது
இளம்பெண்ணுக்கு செல்போனில் தொல்லை கொடுத்ததை தட்டிக்கேட்ட பூசாரியை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. ஊரடங்கு உத்தரவால் சிக்க மாட்டோம் என நினைத்து இளம்பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபர்கள் - பொதுமக்கள் மடக்கிப்பிடித்து அடி-உதை
ஊரடங்கு உத்தரவால் சிக்க மாட்டோம் என நினைத்து இளம்பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபர்களை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
3. திருமணமான 4 ஆண்டுகளில் சோகம்: நர்சு தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
ஆவடி அருகே திருமணமாகி 4 ஆண்டுகளில் நர்சாக பணிபுரிந்து வந்த இளம்பெண் ஒருவர், கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. நாகர்கோவிலில் பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் சாவு: படுகாயம் அடைந்த கணவரும் பலியான பரிதாபம்
நாகர்கோவிலில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலியான சம்பவத்தில் படுகாயம் அடைந்த கணவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
5. சிலிண்டர் வெடித்து இளம்பெண் பலி காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்
ஈரோடு அருகே சிலிண்டர் வெடித்து இளம்பெண் இறந்தார். அவரை காப்பாற்ற சென்ற கணவர் படுகாயம் அடைந்தார்.