டிக்... டிக்... திக்... திக்... நிமிடங்கள் 8 மணி நேர போராட்டத்திற்கு பின் வெடிகுண்டுகள் செயலிழக்க வைப்பு சிதறல்களை சேகரித்து நிபுணர்கள் ஆய்வு


டிக்... டிக்... திக்... திக்... நிமிடங்கள்   8 மணி நேர போராட்டத்திற்கு பின் வெடிகுண்டுகள் செயலிழக்க வைப்பு   சிதறல்களை சேகரித்து நிபுணர்கள் ஆய்வு
x
தினத்தந்தி 20 Jan 2020 11:00 PM GMT (Updated: 20 Jan 2020 8:46 PM GMT)

விமான நிலையத்தில் சிக்கிய வெடிகுண்டுகள்8 மணி நேர போராட்டத்திற்கு பிறகுவெடித்து செயலிழக்க வைக்கப்பட்டன. அதன்சிதறல்களைசேகரித்து நிபுணர்கள்எந்த வகையான குண்டு என ஆய்வு செய்து வருகிறார்கள்.

மங்களூரு,

மங்களூரு விமான நிலையத்தில் நேற்று காலை 10.30 மணி அளவில் கேட்பாரற்று கிடந்த பை கண்டறியப்பட்டது. வெடிகுண்டு பீதி ஏற்பட்டதால் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து அந்த பையை சோதனையிட்டனர். சோதனையில் அந்த பையில் 3 வெடி குண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

உடனே விமான நிலையத்திற்கு வந்திருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் உயர் போலீஸ் அதிகாரிகளும், வெடிகுண்டு செயலிழப்பு குழுவினரும் அங்கு விரைந்தனர். அவர்கள் வெடிகுண்டுகளை பத்திரமாக எடுத்துச் சென்று மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து வெடித்து செயலிழக்க வைக்க முடிவு செய்தனர்.

கெஞ்சாரு மைதானம்

இதற்காக வெடிகுண்டுகளை பத்திரமாக எடுத்துச்செல்லும் பிரத்யேக வெடிகுண்டு தடுப்பு வாகனத்தை வரவழைத்தனர். அந்த வாகனத்தில் உள்ள ராட்சத உருளையில் வெடிகுண்டு இருந்த பை வைக்கப்பட்டது. அந்த வெடிகுண்டு தடுப்பு வாகனம், ஒரு டிராக்டரில் ஏற்றப்பட்டது.

பின்னர் டிராக்டர் விமான நிலையத்தில் இருந்து பனம்பூர் அருகே கெஞ்சாரு மைதானத்தை நோக்கி சென்றது. அப்போது அந்த வாகனத்தின் முன்னும், பின்னும் போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் அணிவகுத்து சென்றனர். மேலும் வேடிக்கை பார்க்கவும் வழிநெடுகிலும் ஏராளமானோர் திரண்டு நின்றனர். ஆனால் பனம்பூர் டவுனில் இருந்து கெஞ்சாரு மைதானத்திற்கு செல்லும் சாலை பள்ளமாக இருந்ததால், டிராக்டரை பிரேக் பிடித்து மெதுவாக டிரைவர் இயக்கினார்.

அரை மணி நேரம் தாமதம்

அந்த சமயத்தில் உருளையில் கிடந்த வெடிகுண்டுகள் முன்னும், பின்னும் அசைய தொடங்கியது. இதனால் வெடிகுண்டுகள் வெடித்து விடலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. உடனே போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் மாற்று வழியில் வெடிகுண்டு தடுப்பு வாகனத்தை எடுத்துச் செல்ல திட்டமிட்டனர்.

அதன்படி வெடிகுண்டு தடுப்பு வாகனத்தை தனியாக டிராக்டரில் இருந்து பாதுகாப்பாக இறக்கினர். பின்னர் அந்த வெடிகுண்டு தடுப்பு வாகனம், கிரேன் உதவியுடன் பள்ளமான சாலையில் இயக்கப்பட்டது. இதனால் வெடிகுண்டுகளை செயலிழப்பு செய்யும் நடவடிக்கை சுமார் அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

வெடித்து செயலிழப்பு

இதற்கிடையே பகல் 3.30 மணி அளவில் அந்த வெடிகுண்டு தடுப்பு வாகனம் கெஞ்சாரு மைதானத்தை வந்தடைந்தது. அந்்த மைதானத்தில் வெடிகுண்டுகளை செயலிழப்பு செய்ய மணல் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டன. பின்னர் ெவடிகுண்டு தடுப்பு வாகனத்தில் ராட்சத உருளையில் இருந்து பாதுகாப்பு கவசம் அணிந்த வெடிகுண்டு நிபுணர், பாதுகாப்பு குச்சி உதவியுடன் வெடிகுண்டு இருந்த பையை எடுத்தார்.

அதனை மணல் மூட்டைகள் அடுக்கிவைத்திருந்த இடத்திற்கு எடுத்து சென்றார். மணல் மூட்டைகளின் அடிப்பகுதியில் தோண்டப்பட்டு இருந்த 12 அடி ஆழ குழியில் அந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டன. மாலை 5.30 மணி அளவில் அந்த வெடிகுண்டுகளை, டெட்டனேட்டர் மூலம் வெடிக்க செய்து செயலிழக்க வைத்தனர். அந்த வெடிகுண்டுகள் தீ்பிழம்பை கக்கியவாறு வெடித்தன.

சிதறல்கள்சேகரிப்பு

அந்த சமயத்தில் அந்த மைதானத்தில் இருந்தவர்கள், விசில் அடித்தும், கைத்தட்டியும் ஆரவாரம் செய்தனர். பின்னர் செயலிழந்த வெடிகுண்டுகளின் உதிரிபாகங்களை வெடிகுண்டு நிபுணர்கள் சேகரித்தனர். பின்னர் அவற்றை கொண்டு சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். ஆய்வுக்கு பின்னரே இது எந்தவகையான வெடிபொருள் பயன்படுத்தி இந்த குண்டுகள் தயாரிக்கப்பட்டது என்பது தெரியவரும்.

மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு சிக்கியது முதல் அது செயலிழக்க வைக்கப்பட்ட ெநாடி வரை வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் மற்றும் பொதுமக்களின் இதயம் டிக்... டிக்... திக்... திக்.. என்ற நிலையிலேயே இருந்ததை காண முடிந்தது.

8 மணி நேர போராட்டம்

காலை 10.30 மணி அளவில் விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் இருந்த பை கண்டறியப்பட்டது. அதை கைப்பற்றிய வெடிகுண்டு நிபுணர்கள் மாலை 5.30 மணிக்கு தான் அதனை செயலிழக்க வைத்தனர். அதாவது 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் செயலிக்க வைக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story