மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சியில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Retired village administrative officer commits suicide in Kallakurichi

கள்ளக்குறிச்சியில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சியில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை
கள்ளக்குறிச்சியில், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் வசித்து வந்தவர் ராஜாராம் (வயது 68), ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் இவருடைய 2-வது மகள் சுகந்தி என்பவரது குடும்பத்திற்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற, ராஜாராம் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் பதறிய அவரது மனைவி விஜயலட்சுமி பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். அப்போது ராஜாராம் தனது மகள் சுகந்தி வீட்டின் மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை பார்த்த விஜயலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

போலீசார் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் விரைந்து வந்து, தற்கொலை செய்து கொண்ட ராஜாராமின் உடலை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அவரது மகன் சத்தியநாராயணன்(30) கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜாராமின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சேலம் அருகே நூற்பாலை கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை உறவினர்கள் முற்றுகை-போலீஸ் குவிப்பு
சேலம் அருகே நூற்பாலை கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். நூற்பாலை நிர்வாகத்தின் நெருக்கடியால் தான் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறி உறவினர்கள் மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் அந்த ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. மணப்பாறையில் ஜூஸ் கடை உரிமையாளர் தற்கொலை
மணப்பாறையில் ஜூஸ் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
4. திருவேங்கடம் அருகே பிளஸ்-1 மாணவர் தற்கொலை: தந்தை கண்டித்ததால் சோக முடிவு
திருவேங்கடம் அருகே சரியாக படிக்காததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ்-1 மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. திருச்சி ஓட்டல் அறையில் தூக்குப்போட்டு தொழில் அதிபர் தற்கொலை
திருச்சி ஓட்டல் அறையில் தொழில் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. மேலும் உருக்கமான கடிதம் சிக்கியது.