சாலை விபத்துகளில் உயிர்பலியை குறைக்க நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு தகவல்


சாலை விபத்துகளில் உயிர்பலியை குறைக்க நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 21 Jan 2020 10:45 PM GMT (Updated: 21 Jan 2020 8:23 PM GMT)

சாலை விபத்துகளில் உயிர்பலியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

மேலூர்,

மேலூரில் போலீசார் சார்பில் சாலைபாதுகாப்பு வாரவிழா நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோதினி, இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் , சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகபாண்டியன், பிச்சை, முருகராஜா, பழனி, முனியாண்டி, கலாசேகர் உள்ளிட்டோர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அட்டைகளுடன் ஊர்வலமாக சென்றனர்.

நடவடிக்கை

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறியதாவது:-

கடந்த 2018-ம் ஆண்டை விட 2019-ம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிர்பலி 15 சதவீதமாக குறைந்துள்ளது. இனிவரும் காலங்களில் உயிர்பலியை 50 சதவீதம் குறைக்க மாவட்ட போலீசாரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story