களக்காடு மலையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது
களக்காடு மலையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது.
களக்காடு,
நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள புலிகள் காப்பகத்தில் ஆண்டு தோறும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. அதன்படி இந்தாண்டு பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது.
இந்த பணியில் கல்லூரி மாணவர்கள், இயற்கை நல ஆர்வலர்கள், வனத்துறை ஊழியர்கள் என 100 பேர் ஈடுபடுகிறார்கள். இவர்கள் 21 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக கணக்கெடுப்பு குழுவினருக்கான பயிற்சி நேற்று காலையில் நடந்தது. களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் கயாரத் மோகன்தாஸ் உத்தரவின்படி, துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் ஆலோசனையின்படி சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. களக்காடு வனச்சரகர் புகழேந்தி பயிற்சியை தொடங்கி வைத்தார்.
இதில் கணக்கெடுப்பு பணிகளை எப்படி மேற்கொள்வது என்பது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் களக்காடு, திருக்குறுங்குடி, கோதையாறு வனச்சரகத்தில் கணக்கெடுப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
28-ந் தேதி வரை
களக்காடு வனச்சரகத்தில் 8 குழுவினரும், திருக்குறுங்குடி வனச்சரகத்தில் 8 குழுவினரும், கோதையாறு வனச்சரகத்தில் 5 குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று காலை முதல் கணக்கெடுப்பு பணியை தொடங் கினார்கள். இவர்கள் வனவிலங்குகளை நேரில் காண்பது, அவைகளின் எச்சங்கள், கால்தடங்களை சேகரித்தல் போன்ற முறைகளில் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள் வருகிற 28-ந் தேதி வரை வனப்பகுதியில் முகாமிட்டு கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள். வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிக்கு செல்போன் செயலியும் பயன்படுத்தப்படுகிறது.

Related Tags :
Next Story