பா.ஜனதா அரசு அமைவதை தடுக்க முஸ்லிம்கள் வற்புறுத்தியதால் சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சி மந்திரி அசோக் சவான் பேச்சு
பாரதீய ஜனதா அரசு அமைவதை தடுக்க முஸ்லிம்கள் வற்புறுத்தியதால் சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தோம் என்று மந்திரி அசோக் சவான் பேசினார்.
மும்பை,
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சமீபத்தில் நாந்தெட்டில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட பொதுப்பணித்துறை மந்திரியும், முன்னாள் முதல்-மந்திரியுமான அசோக் சவான் பேசியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளாக பாரதீய ஜனதா ஆட்சியால் மராட்டியம் பாதிக்கப்பட்டது. எனவே மாற்று அரசு அமைக்க முயற்சி செய்தோம். பாரதீய ஜனதா அரசு அமைவதை தடுக்க வேண்டும் என்று முஸ்லிம்களும் வற்புறுத்தினார்கள். இதனால் எங்களது மிகப்பெரிய எதிரியான பாரதீய ஜனதாவை அதிகாரத்தில் இருந்து விலக்கி வைக்க சிவசேனாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தோம்.
மதசார்பின்மை தான் நமது அடித்தளம். குடியுரிமை சட்டம் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வைரலான வீடியோ
அசோக் சவான் பேச்சு அடங்கிய இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து நேற்று மும்பையில் விளக்கம் அளித்த அசோக் சவான், “நான் முஸ்லிம்கள் என்று குறிப்பிட்டு பேசவில்லை. சிவசேனா கூட்டணி அரசில் பங்கேற்குமாறு அனைத்து சமுதாயத்தினரும் வற்புறுத்தினார்கள் என்று தான் பேசினேன்” என்றார்.
Related Tags :
Next Story