பால்கர் மாவட்டத்தில் மீண்டும் நிலநடுக்கம் 15 மாதங்களில் 60 தடவை பூமி அதிர்ந்தது
பால்கர் மாவட்டத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.
மும்பை,
மும்பை அருகே உள்ள பால்கர் மாவட்டத்தில் சமீப காலமாக நிலநடுக்கம் மக்களை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக தகானு தாலுகா துண்டல்வாடி கிராமத்தில் அடிக்கடி நிலஅதிர்வு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை 10.38 மணி அளவில் துண்டல்வாடி கிராமத்தை மையமாக கொண்டு, 10 கி.மீ. ஆழத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த அதிர்வை துண்டல்வாடி கிராமம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் உணர்ந்து அதிர்ச்சி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். 2.5 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் பதிவாகியது. ஆனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
60 தடவை
கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் முதல் பால்கர் மாவட்டத்தில் 60 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.
15 மாதங்களில் 60 தடவை பூமி அதிர்ந்து இருப்பது மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்து உள்ளது.
Related Tags :
Next Story