மாவட்ட செய்திகள்

கழுத்தை நெரித்து வாலிபர் கொலை - நண்பர்கள் 2 பேர் கைது + "||" + Strangulated Young Men Murder 2 friends arrested

கழுத்தை நெரித்து வாலிபர் கொலை - நண்பர்கள் 2 பேர் கைது

கழுத்தை நெரித்து வாலிபர் கொலை - நண்பர்கள் 2 பேர் கைது
உத்திரமேரூர் அருகே கழுத்தை நெரித்து வாலிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த அனுமந்தண்டலம் மதுக்கடை எதிரே உள்ள சவுக்கு தோப்பில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக பெருநகர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பெருநகர் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் இறந்து கிடந்தவர் திருவண்ணாமலை மாவட்டம், வெண்பாக்கம் வட்டம் மகாஜனம்பாக்கம் கிராமம் மேட்டுத்தெருவை சேர்ந்த அரிகிருஷ்ணன் (வயது 34) என்பதும் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் வட்டம் ஆக்கூர் கூட்ரோட்டை சேர்ந்த சங்கர் (37), திருவண்ணாமலை மாவட்டம், வெண்பாக்கம் வட்டம் உக்கம் பெரும்பாக்கம் மசூதி தெருவை சேர்ந்த சிராஜூதீன் (23) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் இருவரும் சக நண்பரான அரிகிருஷ்ணனோடு சேர்ந்து அனுமந்தண்டலத்தில் உள்ள மதுக்கடையில் மதுவாங்கி கொண்டு அதன் எதிரே இருந்த சவுக்குத்தோப்பில் அமர்ந்து மது குடித்ததாகவும் அப்போது அரிகிருஷ்ணன் அணிந்திருந்த 3 பவுன் நகைக்காக அவரை கழுத்தை நெரித்து கொலைசெய்ததாக அவர்கள் தெரிவித்ததாக தெரிகிறது.

அதன் அடிப்படையில் உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து சங்கர், சிராஜூதீன் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தோப்புக்கரணம் போட வைத்த போலீசார்
தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு காரணமாக டி-பிளாக் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் தோப்புக்கரணம் போட வைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
2. திருச்செந்தூரில் காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருச்செந்தூரில் காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. 40 பவுன் நகைகள் மீட்பு: ‘‘சூதாடுவதற்காக கொள்ளையில் ஈடுபட்டேன்’’ கைதான வாலிபர் வாக்குமூலம்
குமரியில் கொள்ளை போன 40 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. பணம் வைத்து சூதாடுவதற்காக கொள்ளையில் ஈடுபட்டதாக கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
4. தலையில் கல்லை போட்டு 4 பேரை கொலை செய்த ‘சைக்கோ’ வாலிபர் கைது பரபரப்பு வாக்குமூலம்
தலையில் கல்லைபோட்டு 4 பேரை கொலை செய்த ‘சைக்கோ’ வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
5. நெல்லையில் காதல் திருமணம் செய்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
நெல்லையில் காதல் திருமணம் செய்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.