வெங்கல் அருகே, லாரி உரிமையாளர் வீட்டில் நகை- பணம் கொள்ளை
வெங்கல் அருகே லாரி உரிமையாளர் வீட்டில் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே உளள பூச்சிஅத்திப்பேடு கிராமத்தில் உள்ள மகாலட்சுமி நகர் பேங்க் தெருவை சேர்ந்வர் கஜேந்திரன் (வயது58). லாரி உரிமையாளர். இவரது மூத்த மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இளைய மகன் மாதர்பாக்கம் கிராமத்தில் உள்ள கனரா வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இளைய மகன் வேலைக்கு சென்ற பின்னர் கஜேந்திரன் தனது மனைவியுடன் அருகில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்தார். சாமி தரிசனம் முடித்து விட்டு வீட்டுக்கு வந்த போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்கச்சங்கிலி, கம்மல் உள்ளிட்ட 10 பவுன் தங்க நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.15 ஆயிரம் போன்றவற்றை கொள்ளையடித்து கொண்டு பின்பக்கம் வழியாக தப்பி சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து கஜேந்திரன் வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேலு தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் லீமா வரவழைக்கப்பட்டது. அது கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள மைதானத்திற்கு ஓடிச் சென்றது. யாரையும் கவ்வி பிடிக்க விலலை.
Related Tags :
Next Story