ரூ.2 ஆயிரம் கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள்: போக்குவரத்து நெரிசலற்ற நகரமாக கோவை மாறும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி


ரூ.2 ஆயிரம் கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள்: போக்குவரத்து நெரிசலற்ற நகரமாக கோவை மாறும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி
x
தினத்தந்தி 24 Jan 2020 10:30 PM GMT (Updated: 23 Jan 2020 6:51 PM GMT)

ரூ.2 ஆயிரம் கோடி செலவில் சாலைமேம்பாட்டு பணிகள்நடை பெறுவதால் போக்குவரத்து நெரிசலற்ற நகரமாக கோவைமாறும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதியளித்தார்.

கோவை,

கோவையில் நடைபெற்று வரும்வளர்ச்சித்திட்டப்பணிகள்குறித்து அமைச்சர்எஸ்.பி.வேலுமணிமாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இந்த கூட்டத்தில்கலெக்டர்ராஜாமணி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மைஇயக்குனர்மகேஸ்வரன், மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன்குமார் ஜடாவத் உள்பட பலர்கலந்துகொண்டனர். கூட்டத்தில் அமைச்சர்எஸ்.பி.வேலுமணிபேசும்போதுகூறியதாவது:-

கோவை நகரில் 50 ஆண்டுகளில் இல்லாதவளர்ச்சிப்பணிகள்நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட மக்களின் நீண்டகால கனவான மெட்ரோ ரெயில் திட்டம் சென்னை மெட்ரோ ரெயில் கார்ப்பரேசன்மூலம் கள ஆய்வு நடைபெற்று வருகிறது.ரூ.1500 கோடி மதிப்பில்ஸ்மார்ட்சிட்டிதிட்டத்தின் கீழ்உக்கடம்பெரியகுளம்,வாலாங்குளம்உள்ளிட்ட 8 குளங்களில்மேம்பாட்டு பணிகளும், பூங்காக்கள், சாலைகள் போன்ற பல்வேறுவளர்ச்சிப்பணிகளும்நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கோவையில்தடையில்லா குடிநீர்வழங்குவதற்கானதிட்டப்பணிகளையும், மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கான குடிநீர்அபிவிருத்தி திட்டப்பணிகளையும், புதிய குடிநீர்இணைப்புகளையும்விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுபோலவே,பாதாள சாக்கடைதிட்டப்பணிகளையும்,மழைநீர்வடிகால் பணிகளையும்மக்களுக்கு பயன்தரும்வகையில் விரைந்து முடித்திட வேண்டும்.

பொள்ளாச்சி முதல்ஈச்சனாரிவரைரூ.414.90 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி 90சதவீதம்நிறைவடைந்துள்ளது. ரூ.320 கோடியில் மேற்கு புறவழிச்சாலை,ரூ.215 கோடியில்ஆத்துப்பாலம்-உக்கடம்வரை மேம்பாலம், ரூ.194 கோடியில் காந்தி புரம் இரண்டு அடுக்கு மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.உப்பிலிப்பாளையம் முதல் சின்னியம்பாளையம்வரை சுமார் 9.கி.மீ நீளமுள்ளஅவினாசி சாலையில்உயர்மட்டபாலம் ரூ.1000 கோடி மதிப்பீட்டில்கட்டும் பணிக்கு மண் பரிசோதனை செய்யப்பட்டு பாலத்திற்கானவடிவமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.இம்மேம்பாலப்பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

கோவை-திருச்சி சாலையில்பங்குசந்தைஅலுவலகத்தில் இருந்து ரெயின்போ வரையில் 3.15கி.மீ. நீளத்திலான மேம்பாலம்,கவுண்டம்பாளையம் பகுதியில் ரூ.66 கோடி மதிப்பீட்டில் ஹவுசிங் யுனிட் முதல்,ராமசாமி கல்யாண மண்டபம் வரை 1கி.மீ. நீளத்திலான உயர்மட்ட மேம்பாலம் என சுமார்ரூ.2000 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டுப் பணிகளும், உயர்மட்டப்பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றது.இப் பணிகளை அலுவலர்கள் விரைந்து செயல்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரஉரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இத்திட்டங்கள்அனைத்தும் செயல்பாட்டிற்குவரும்போதுதமிழ்நாட்டிலேயேகோவை போக்குவரத்துநெரிசலற்ற பகுதியாக வரும் 50 ஆண்டிற்கு விளங்கும். மேலும்,ரூ.168 கோடியில்வெள்ளலூரில்50 ஏக்கரில், தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய நிதியில் புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம்அமைப்பதற்கானபணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. பொதுமக்களின்அடிப்படை தேவைக்கானகோரிக்கைகளை அதிகாரிகள் விரைந்துசெய்துகொடுக்கவேண்டு்ம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில்எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன்,வி.சி.ஆறுக்குட்டி, எட்டிமடைசண்முகம்ஆகியோர் கலந்துகொண்டனர்.

Next Story