மாவட்ட செய்திகள்

திருச்சி மத்திய சிறையில் கைதிகளை தாக்கிய ஜெயிலர், வார்டர்கள், டாக்டர் மீது வழக்கு + "||" + Jailor, warders attack doctor in prison in Trichy central jail

திருச்சி மத்திய சிறையில் கைதிகளை தாக்கிய ஜெயிலர், வார்டர்கள், டாக்டர் மீது வழக்கு

திருச்சி மத்திய சிறையில் கைதிகளை தாக்கிய ஜெயிலர், வார்டர்கள், டாக்டர் மீது வழக்கு
திருச்சி மத்திய சிறையில் கைதிகளை தாக்கிய ஜெயிலர், வார்டர்கள், டாக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கே.கே.நகர்,

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,500 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் மதுரையை சேர்ந்த முனுசாமி(வயது 25), திருச்செல்வம் ஆகியோர் திருச்சி சிறையில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் 5-ந் தேதி சிறை வார்டர்கள் புண்ணியமூர்த்தி, முருகானந்தம், ஜெயிலர் ரமேஷ் ஆகியோர் சிறைக்குள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.


அப்போது முனுசாமி, திருச்செல்வம் ஆகியோர் கைதிகளின் சீருடை அணியாமல் இருந்தனர். இது தொடர்பாக கேட்டபோது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிறை வார்டர்கள் மற்றும் ஜெயிலர் சேர்ந்து கைதிகள் 2 பேரையும் தாக்கினர்.

இதில் காயம் அடைந்த அவர்களுக்கு சிறை டாக்டர் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஜெயிலர் உள்பட 4 பேர் மீது வழக்கு

இதுகுறித்து முனுசாமி திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 2-ல் சிறை வார்டர்கள், ஜெயிலர், டாக்டர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு இதுகுறித்து விசாரணை நடத்த கே.கே.நகர் போலீசாருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து ஜெயிலர் ரமேஷ், வார்டர்கள் புண்ணியமூர்த்தி, முருகானந்தம் மற்றும் டாக்டர் ஆகிய 4 பேர் மீதும் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன் விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் கரூர் ரெயில்நிலைய பொருட்களை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு அமீனா
விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரெயில் நிலைய பொருட்களை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு அமீனா வந்தார். இதையடுத்து காலஅவகாசம் கேட்டதால் திரும்பி சென்றார்.
2. சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு
தூத்துக்குடியில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. மின்வாரிய ‘கேங்மேன்’ வேலைக்கு லஞ்சம் வழக்கு: அரசின் கோரிக்கையை ஏற்று ஐகோர்ட்டில் நாளை விசாரணை
மின்வாரிய ‘கேங்மேன்’ வேலைக்கு லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் அரசின் கோரிக்கையை ஏற்று ஐகோர்ட்டில் நாளை விசாரணை நடைபெறவுள்ளது.
4. வங்கி கடன் வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி - 3 பேர் மீது வழக்கு
வங்கி கடன் வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
5. ஊழல் எம்.பி.க்கள் மீது வழக்கு தொடர சி.பி.ஐ.க்கு அனுமதி கிடைக்குமா? - 4 மாதத்துக்கு மேல் காத்திருக்கிறது
ஊழல் எம்.பி.க்கள் மீது வழக்கு தொடருவதற்காக சி.பி.ஐ. 4 மாதத்துக்கு மேல் காத்திருக்கிறது.