தாய்க்கு உடல் நிலை சரி இல்லாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


தாய்க்கு உடல் நிலை சரி இல்லாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 Jan 2020 4:00 AM IST (Updated: 24 Jan 2020 2:54 AM IST)
t-max-icont-min-icon

தாய்க்கு உடல் நிலை சரிஇல்லாததால் தன்னை தவிக்கவிட்டு இறந்துவிடுவாரோ என்ற அச்சத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவொற்றியூர், 

சென்னை மணலி சின்னசேக்காடு பகுதியைச்சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி பிரியா. இவர்களுடைய மகள் விஷாலி (வயது 17). பிரியாவுக்கு அடிக்கடி வலிப்பு நோய்வரும் என கூறப்படுகிறது.

இதனால் பிரியா, அடிக்கடி தனக்கு இதுபோல் உடல்நலம் பாதிக்கப்படுவதால் தனது மகளை தவிக்கவிட்டு இறந்து விடுவேனோ? என கணவரிடம் அச்சத்துடன் பேசி வந்தார். இதேபோல் அவர் பலமுறை பேசியது விஷாலியின் மனதில் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது. உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தாய், தன்னை தனியாக தவிக்கவிட்டு இறந்து விடுவாரோ? என மனமுடைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில் விஷாலி, நேற்று காலை தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் தாயின் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த மணலி போலீசார், விஷாலி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story