பத்லாப்பூரில் மகளின் காதலனை குத்திக்கொன்ற சப்-இன்ஸ்பெக்டர் கைது


பத்லாப்பூரில்   மகளின் காதலனை குத்திக்கொன்ற சப்-இன்ஸ்பெக்டர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2020 4:24 AM IST (Updated: 24 Jan 2020 4:24 AM IST)
t-max-icont-min-icon

மகளின் காதலனை கத்தியால் குத்திக்கொலை செய்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

அம்பர்நாத்,

தானே மாவட்டம் பத்லாப்பூரை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாம்தேவ்(வயது68). இவர் கணவரை இழந்த மகள், 8 வயது பேரனுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் நாம்தேவின் விதவை மகளுக்கு பத்லாப்பூர் நெவாலி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சச்சின்(35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் திருமணம் செய்ய முடிவு செய்து இருந்தனா். ஆனால் இதற்கு ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து அவரது மகள் ஆட்டோ டிரைவர் உடனான காதலை கைவிட்டதாக கூறப்படுகிறது. எனினும் ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணை பின்தொடா்ந்து தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

கத்தியால் குத்திக்கொலை

இதனால் ஆத்திரமடைந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாம்தேவ் சம்பவத்தன்று பத்லாப்பூர், சிர்வகாவ் சவுக் பகுதிக்கு வந்த ஆட்டோ டிரைவர் சச்சினை கத்தியால் குத்திக்கொலை செய்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பத்லாப்பூர் போலீசார் மகளின் காதலனை கொலை செய்த நாம்தேவை கைது செய்தனர். மேலும் சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story