பாம்பன்-மண்டபத்தில் கடல் சீற்றம்; படகுகள் நிறுத்தம்
பாம்பன், மண்டபம் பகுதியில் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
ராமேசுவரம்,
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும், கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
எனவே பாம்பன், மண்டபம் பகுதிகளில் இருந்து தென் கடலான மன்னார் வளைகுடா கடலில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 200 நாட்டுப்படகுகளும் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன.
பாம்பன் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக பலத்த காற்று வீசியதால், கடல் சீற்றத்துடனேயே காணப்பட்டது. இதே போல் மண்டபம் பகுதியிலும் கடல் சீற்றமாக இருந்தது. அலைகள் ஆக்ரோஷமாக எழும்பின.
வடக்கு கடலான பாக்ஜலசந்தியில் அலைகள் தடுப்பு சுவரையும் தாண்டி பல அடி உயரத்தில் சீறி எழுந்தன.
Related Tags :
Next Story