மாவட்ட செய்திகள்

கிருமாம்பாக்கத்தில் காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை + "||" + In kirumampakkat By the failure of love Youth Suicide

கிருமாம்பாக்கத்தில் காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை

கிருமாம்பாக்கத்தில் காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை
கிருமாம்பாக்கத்தில் காதல் தோல்வியால் வாலிபர் எலிமருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர், 

பாகூர் அருகே குடியிருப்பு பாளையம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன் கல்கிதாசன் (வயது 22). தவளக்குப்பத்தில் உள்ள தனியார் செருப்பு தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

கல்கிதாசன் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்த பெண்ணிடம் காதலை சொல்லியபோது அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. காதல் தோல்வியால் கடந்த சில நாட்களாக கல்கிதாசன் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

இதனையடுத்து கல்கிதாசனுக்கு மன மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அவனுடைய பெற்றோர் கிருமாம்பாக்கத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்க வைத்தனர்.

இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி கல்கிதாசன் எலிமருந்தை (விஷம்) தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். இதைப் பார்த்த அவருடைய உறவினர்கள் கல்கிதாசனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டாலின் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கல்கிதாசன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். காதல் தோல்வியால் எலி மருந்து தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. போலீசுக்கு பயந்து பீர் பாட்டிலால் குத்திக்கொண்டு வாலிபர் தற்கொலை
வேப்பேரியில் போலீசுக்கு பயந்து பீர் பாட்டிலை உடைத்து கழுத்தில் குத்திக்கொண்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
2. ஸ்ரீபெரும்புதூர் அருகே, ஏரியில் குதித்து வாலிபர் தற்கொலை - ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததன் விளைவாக ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. காதல் தோல்வியால் தூக்குப்போட்டு திருநங்கை தற்கொலை
காதல் தோல்வியால் தூக்குப்போட்டு திருநங்கை தற்கொலை செய்து கொண்டார்.
4. வெள்ளகோவிலில் விஷ மாத்திரை தின்று வாலிபர் தற்கொலை
வெள்ளகோவிலில் விஷ மாத்திரை தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
5. வெள்ளகோவிலில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
வெள்ளகோவிலில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.