போதிய பஸ்கள் இயக்கக்கோரி, சி.முட்லூர் அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்


போதிய பஸ்கள் இயக்கக்கோரி, சி.முட்லூர் அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2020 4:15 AM IST (Updated: 24 Jan 2020 5:20 AM IST)
t-max-icont-min-icon

போதிய பஸ்கள் இயக்கக்கோரி சி.முட்லூர் அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணாமலைநகர், 

சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூரில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் சிதம்பரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் என 2 ‌ஷிப்ட் முறையில் இயங்கி வருகிறது.

சிதம்பரத்தில் இருந்து கல்லூரிக்கு ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்றுகொண்டு பயணம் செய்வதையும் காணமுடிகிறது. மதிய வேளையில் குறிப்பிட்ட நேரத்தில் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கொளுத்தும் வெயிலில் மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு நடந்தே செல்கிறார்கள்.

இது பற்றி மாணவ-மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடமும், அரசு போக்குவரத்துக்கழக பணிமனையிலும் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், கல்லூரிக்கு காலை, மதியம், மாலை என 3 வேளையும் குறிப்பிட்ட நேரத்தில் போதிய அளவு அரசு பஸ்கள் இயக்க வேண்டும், பரங்கிப்பேட்டை, பு.முட்லூருக்கு பஸ் இயக்க வேண்டும், பஸ் பாஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷமிட்டனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story