பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வெளியீடான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வினாத்தாள் தொகுப்பு சென்னையில் 3 இடங்களில் கிடைக்கிறது
தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வெளியீடான எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு வினாத்தாள் தொகுப்பு சென்னையில் 3 இடங்களில் கிடைக்கிறது.
சென்னை,
பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வெளியீடான எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு வினாத்தாள் தொகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் ஒரே தொகுதியாக ரூ.60 என்ற விலையிலும், பிளஸ்-2 மாணவர்களுக்கு கணித பாடவரிசைக்கு வினாத்தாள்களின் தொகுப்பு மற்றும் தீர்வு புத்தகம் இணைந்து தமிழ் மற்றும் ஆங்கிலம் வழிக்கு தனித்தனியாக ரூ.80 என்ற விலையிலும் நாளை மறுநாள் (27-ந்தேதி) முதல் விற்பனை செய்யப்படுகிறது.
பிளஸ்-2 அறிவியல் பாடபிரிவுக்கு(தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல்) தமிழ் மற்றும் ஆங்கில வழியில் ஒரே தொகுதியாக ரூ.60-ம், கலைப்பாட பிரிவுக்கு(தமிழ், ஆங்கிலம், கணக்கு பதிவியல், வணிகவியல், பொருளியல், வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்) தமிழ் மற்றும் ஆங்கில வழியில் ஒரே தொகுதியாக ரூ.80-ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் கலை பாடப்பிரிவுக்கு வினாத்தாள்களின் தொகுப்பு அச்சிடும் பணியில் உள்ளதால் பிப்ரவரி முதல் வாரத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.
இந்த வினாத்தாள் தொகுப்பு தமிழகம் முழுவதும் 35 இடங்களில் கிடைக்கிறது. சென்னையில் 3 இடங்களிலும், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தலா ஒரு இடங்களிலும் வினாத்தாள் தொகுப்பு கிடைக்கும். அதன் விவரம் வருமாறு:-
அரசு மேல்நிலைப்பள்ளி, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. சென்னை, எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு, ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை.
டாக்டர் பி.எஸ்.சீனிவாசா நகராட்சி மேல்நிலைப்பள்ளி, காஞ்சீபுரம், ஆர்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்.
Related Tags :
Next Story