மணலூர்பேட்டையை தலைமையிடமாக கொண்டு, புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கக்கோரி அனைத்து கட்சியினர் ஊர்வலம்


மணலூர்பேட்டையை தலைமையிடமாக கொண்டு, புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கக்கோரி அனைத்து கட்சியினர் ஊர்வலம்
x
தினத்தந்தி 24 Jan 2020 10:00 PM GMT (Updated: 24 Jan 2020 11:50 PM GMT)

மணலூர் பேட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கக்கோரி அனைத்து கட்சிகள் சார்பில் நேற்று ஊர்வலம் நடந்தது.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும். இது தொடர்பாக ஏற்கனவே விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர்களிடம் அனைத்து கட்சிகள் சார்பில் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி மணலூர்பேட்டை பஜாரில் நேற்று அனைத்து கட்சி சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு அரிமா சங்க தலைவர் அம்மு.ரவி தலைமை தாங்கினார். அ.தி.மு.க. இளைஞர் அணி நகர செயலாளரும், கூட்டுறவு சங்க தலைவருமான தங்க.பிரகா‌‌ஷ், தி.மு.க. நகர செயலாளர் எம்.கே.சிவா, வர்த்தகர் சங்க தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில் தி.மு.க. வக்கீல் அணி நிர்வாகி ஜெய்கணே‌‌ஷ், அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் சொரையப்பட்டு வி.நெடுஞ்செழியன், மணம்பூண்டி ஒன்றிய அவைத்தலைவர் துரைராஜ், தி.மு.க. ஒன்றிய விவசாய அணி செயலாளர் மேலந்தல் ஆர்.பாரதிதாசன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி முத்துவீரன், குப்புரெட்டியார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று காலை முதல் மதியம் 12 மணிவரை மணலூர்பேட்டை வர்த்தகர் சங்கம் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஊர்வலம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தையொட்டி மணலூர்பேட்டையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story