வந்தவாசியில் குப்பை கொட்ட வந்த பெண்ணிடம் நகை பறிப்பு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


வந்தவாசியில் குப்பை கொட்ட வந்த பெண்ணிடம் நகை பறிப்பு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Jan 2020 10:15 PM GMT (Updated: 25 Jan 2020 2:17 PM GMT)

வந்தவாசியில் குப்பை கொட்ட வந்த பெண்ணிடம் 9 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வந்தவாசி

வந்தவாசி டவுன் அச்சிரப்பாக்கம் சாலையை சேர்ந்தவர் ரங்கன் (வயது 55), மீன் வியாபாரி. இவருடைய மனைவி சாந்தி (50). இவர், நேற்று காலை வீட்டில் உள்ள குப்பைகளை எடுத்துக்கொண்டு வீட்டின் அருகில் உள்ள குப்பை தொட்டியில் கொட்டுவதற்காக நடந்து சென்றார்.

அப்போது ‘ஹெல்மெட்’ அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென சாந்தி கழுத்தில் இருந்த 9 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர். மர்ம நபர்கள் நகை பறித்த போது நிலைத்தடுமாறி கீழே விழுந்து சாந்தி காயம் அடைந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து வந்தவாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்–இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும இதுதொடர்பாக போலீசார் வழக்குப்திவு செய்து, தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story