மழைநீரை சேமிக்க ஏரி, ஆற்றுப்பகுதியில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்
மழைநீரை சேமிக்க ஏரி, ஆற்றுப்பகுதியில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் திருப்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் மற்றும் வனத்துறை பகுதிகளிலும் மழை நீரை சேமிக்க ஏரி, ஆற்று பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் அங்கேயே தங்கி அப்பகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து தர வேண்டும்’ என்றனர்.
அதைத் தொடர்ந்து கலெக்டர் சிவன்அருள் பேசுகையில், விவசாயிகள் சார்ந்த அனைத்து பிரச்சினைகளும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தாலுகா அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலங்களில் நடைபெறும் போது அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்துகொண்டு விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
கூட்டத்தில் வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், விவசாயத்துறை மாவட்ட துணை இயக்குனர் பாலா, வேளாண் பொறியியல் துறை செயற் பொறியாளர் ஸ்ரீதர், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அருண், வேளாண் வணிக துணை இயக்குனர் நரசிம்மரெட்டி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர் உள்பட அனைத்துதுறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story