தமிழகத்தில், இந்த ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


தமிழகத்தில், இந்த ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 25 Jan 2020 11:00 PM GMT (Updated: 25 Jan 2020 5:08 PM GMT)

தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கடத்தூர், 

கோபி அருகே உள்ள மொடச்சூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த ஆட்சியில் மற்ற மாநிலங்களை விட சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ரூ.1,000 பொங்கல் பரிசாக வழங்கி உள்ளது இந்த அரசு.

தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

தி.மு.க. ஆட்சியில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த ஆட்சியில் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது. பிளஸ்-2 படித்தவுடன் வேலைவாய்ப்புகள் கிடைக்க இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் விரைவில் வர உள்ளது. பொதுமக்கள் அனைவரும் இந்த அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால்தான் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story