கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் நல்லா இருக்க முடியாது - அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆவேசம்


கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் நல்லா இருக்க முடியாது - அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆவேசம்
x
தினத்தந்தி 25 Jan 2020 10:45 PM GMT (Updated: 25 Jan 2020 5:08 PM GMT)

கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் நல்லா இருக்க முடியாது என அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆவேசமாக பேசினார்.

அம்மாபேட்டை,

அம்மாபேட்டையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் முதல்- அமைச்சர் ஆகலாம். அமைச்சர் ஆகலாம். ஒன்றியக்குழு தலைவர் ஆகலாம். நான் அமைச்சர் ஆவேன் என நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஆனால் நான் இன்று அமைச்சர் ஆகி உள்ளேன்.

தி.மு.க.வில் அப்படி இல்லை. அது குடும்ப கட்சி. முதலில் கருணாநிதி, அடுத்து ஸ்டாலின், உதயநிதி என அவர்கள் குடும்ப அரசியல் செய்கிறார்கள்.

முதல்-அமைச்சர் ஆகும் கனவில் மு.க.ஸ்டாலின் உள்ளார். ஆனால் அவருக்கு அந்த யோகம் இல்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஸ்டாலினால் முதல்-அமைச்சர் ஆக முடியாது.

சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீத இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது. இ்ங்குள்ள ஒரு சில எம்.எல்.ஏ.க்களால் 100 சதவீதம் பெற வேண்டிய வெற்றி பறிபோனது. கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் நல்லா இருக்க முடியாது. சில அ.தி.மு.க.வினரால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. யார் கட்சிக்கு துரோகம் செய்கிறார்கள் என்று மக்களுக்கு தெரியும். அ.தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் மக்களுக்கு என்ன அடிப்படை தேவைகள் என்பதை அறிந்து பூர்த்தி செய்து கொடுத்து அவர்களிடத்தில் நல்ல பெயர் எடுத்தாலே அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story