விசாரணைக்கு சென்ற போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த ஆடிட்டர் கைது


விசாரணைக்கு சென்ற போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த ஆடிட்டர் கைது
x
தினத்தந்தி 26 Jan 2020 3:30 AM IST (Updated: 25 Jan 2020 11:36 PM IST)
t-max-icont-min-icon

அதியமான்கோட்டை அருகே விசாரணைக்கு சென்ற போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த ஆடிட்டரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே அப்பனகோம்பை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து வந்த ஒரு புகார் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அதியமான்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அதியமான் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.

அப்போது அந்த ஊரை சேர்ந்த கல்யாண சுந்தரம் (வயது 27) என்ற ஆடிட்டர் புகார் தொடர்பாக நாங்களே விசாரணை நடத்தி கொள்கிறோம் என்று கூறி போலீசாரின் விசாரணையை தடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், போலீசாரை தரக்குறைவான வார்த்தையால் பேசி பணி செய்ய விடாமல் தடுத்ததாக தெரிகிறது.

இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் அதியமான் கொடுத்த புகாரின் பேரில் அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடிட்டர் கல்யாணசுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story